From ₹2 Crore Budget to ₹309 Crore Box Office: The Remarkable Success of Hanuman Ans google
சினிமா

ரூ.2 கோடி முதலீடு... : 150 மடங்கு வசூல் கொடுத்த ‘ஹனுமன் அன்ஸ்’! : 309 கோடி கலெக்சன்..

விளம்பரம் இன்றி வெளியான ஆன்மிகத் திரைப்படம்; முதல் இரண்டு வாரங்களில் வரவேற்பு இல்லாத நிலையிலிருந்து உலகளவில் ரூ.309 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

NARENDRAN K

எதிர்பார்த்ததை விட எகுறியா வசூல் :

விளம்பரம் இல்லாமல், பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் வெளியான ஆன்மிகத் திரைப்படமான ‘ஹனுமன் அன்ஸ்’, உலகளவில் ரூ.309 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தி படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

நீம் கரோலி பாபாவின் வாழ்க்கைக் கதை :

இயக்குநர் விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள இந்த படம், வட இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிக குருவான நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

தாயை இழந்த சிறுவனான லட்சுமி நாராயணன், ஆன்மிகப் பயணத்தின் மூலம் நீம் கரோலி பாபாவாக எவ்வாறு உருவாகிறார் என்பதையே படம் கூறுகிறது.

பக்தி, தியானம், சேவை மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

21 வயது இளம்பெண்ணின் நம்பிக்கை :

இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுப்பிரியா ஏ. நாகர், வெறும் 21 வயதிலேயே இந்த திட்டத்தில் இணைந்தார்.

இங்கிலாந்தில் படித்து வந்த அவர், நீம் கரோலி பாபா குறித்து அறிந்த பிறகு அவரது வாழ்க்கையை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், பகுதி நேர வேலை மூலம் சேமித்து வைத்திருந்த தனது முழு சேமிப்புத் தொகையையும் படத்திற்காக முதலீடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு வாரங்கள் தோல்வி :

ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான ‘ஹனுமன் அன்ஸ்’ திரைப்படத்திற்கு முதல் வாரத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இரண்டாவது வாரத்திலும் பார்வையாளர்கள் குறைவாக இருந்ததால், பல திரையரங்குகளில் இருந்து படம் நீக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வாய்மொழி பரிந்துரைகள் மூலம் மற்றவர்களிடம் பகிரத் தொடங்கியதால், மெதுவாக பார்வையாளர்கள் அதிகரித்தனர்.

ரூ.309 கோடி வசூல் சாதனை :

முழுக்க முழுக்க பார்வையாளர்களின் ஆதரவால் வளர்ந்த இந்த திரைப்படம் தற்போது உலகளவில் ரூ.309.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

2026-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, ஆரம்பத்தில் வரவேற்பின்றி போராடிய ஒரு படம் பின்னர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வசூலித்திருப்பது இந்திய சினிமாவில் அரிதான சாதனையாக பார்க்கப்படுகிறது.

====================