Golden Globes Awards 2026 honors film and television here is full winners list in Tamil Golden Globe Awards 2026
சினிமா

கோல்டன் குளோப் 2026 : விருது பெற்ற படங்கள் மற்றும் நடிகர்கள்!

Golden Globe Awards 2026 Winners : 2026 ஆம் ஆண்டின் 83 வது கோல்டன் குளோப் விருது விழாவில், குளோயி ஜாவோ இயக்கத்தில் உருவான ஹாம்நெட் திரைப்படம் 'சிறந்த திரைப்படம் - டிராமா' பிரிவில் விருதை வென்றுள்ளது.

Baala Murugan

ஹாம்நெட் திரைப்படம்

Golden Globe Awards 2026 Winners List in Tamil : ஹாம்நெட் திரைப்படமானது, வில்லியம் ஷேக்ஸ்பியரின் குடும்பம் மற்றும் அவரது மகனின் மரணத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம், விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் நாயகி ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதையும் தட்டிச் சென்ற நிலையில், இசை அல்லது நகைச்சுவை பிரிவில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் வெளியான ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும், இப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றால் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய வெற்றியாளர்கள்

டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை தி சீக்ரெட் ஏஜென்ட் படத்தில் நடித்த வாக்னர் மௌரா வென்றார்.

இசை அல்லது நகைச்சுவை பிரிவில் சிறந்த நடிகர் விருதை மார்டி சுப்ரீம் படத்திற்காக திமோதி சாலமேவும்,சிறந்த நடிகை விருதை ஈஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வில் கிக் யு படத்திற்காக ரோஸ் பைர்னும் வென்றனர்.

சிறந்த அனிமேஷன் படமாக கே-பாப் டீமான் ஹண்டர்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

சின்னத்திரையைப் பொறுத்தவரை, தி பிட் சிறந்த டிராமா தொடராகவும், தி ஸ்டுடியோ சிறந்த நகைச்சுவைத் தொடராகவும் விருதுகளை வென்றன.

தி பிட் தொடருக்காக நோவா வைல் சிறந்த நடிகராகவும், புளூரிபஸ் தொடருக்காக ரியா சீஹார்ன் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய ரசிகர்களுக்கு சிறப்புத் தருணம்

லிமிடெட் சீரிஸ் பிரிவில் அடோலசென்ஸ் நான்கு விருதுகளைக் குவித்து சாதனை படைத்தது.

இந்த ஆண்டு கோல்டன் குளோப் மேடையில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஒரு விருதை வழங்குவதற்காக வருகை தந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெருமை அளிக்கும் தருணமாக அமைந்தது.

மேலும், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான விருதை பிரேசிலின் தி சீக்ரெட் ஏஜென்ட் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த விருதுகள் அனைத்தும் வரும் ஆஸ்கார் விருதுகளுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில், இந்த படங்களும் ஆஸ்கார் விருதுகளில் பட்டியலிடப்பட்டு விருது பெரும் வாய்ப்புகள் இருக்கிறது என திரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கின்றனர்.

============