Gujarati Film Laalo Krishna Sada Sahaayate Box Office Collection Worldwide Google
சினிமா

200 மடங்கு லாபம் : காந்தாரவை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை!

Laalo Krishna Sada Sahaayate Collection: வெறும் 50 லட்சத்தில் எடுக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டு வசூல் சாதனை செய்த படங்களில் முன்னணி வகித்து 200 மடங்கு லாபம் ஈட்டியுள்ளது லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம்

Baala Murugan

அதிக லாபம் ஈட்டிய குஜராத்தி படம்

Gujarati Film Laalo Krishna Sada Sahaayate Box Office Collection Worldwide : 2025-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் முதல் நினைவுக்கு வருவது, காந்தாரா சாப்டர் 1 என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும்.

அதேபோல் 2025-ம் ஆண்டில் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்த படமாகவும் காந்தாரா தான் இருக்கும் என நாம் நினைப்போம்.

அதிக மடங்கு லாபம்

காந்தாராவை விட அதிக மடங்கு லாபத்தை வாரிசுருட்டிய படம் ஒன்று இருக்கிறது. அந்த படத்தின் பெயர்கூட நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட முன்னணி திரையுலகை சேர்ந்த படமில்லை. அது ஒரு குஜராத்தி படம் அப்படி படம் ஈட்டிய முழு விவரத்தை பார்க்கலாம்.

குஜராத்தி படத்தில் இதுவே 200 மடங்கு வசூல்

அப்படத்தின் பெயர்தான் லாலு கிருஷ்ண சதா சஹாயதே. அங்கித் சாகியா இயக்கிய இப்படம் கடந்த அக்டோபர் மாதம் திரைக்கு வந்தது. இது ஒரு ஆன்மீக திரைப்படம். இப்படத்தை வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் தான் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படம் தயாரிப்பாளருக்கு 200 மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. குஜராத்தி மொழியில் வெளியான படங்களில் மிகப்பெரிய வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது என்பது மிக முக்கியமானது.

இதுவரை 100 கோடி வசூல்

லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் ரூ.100 கோடி வசூல் என்கிற இமாலய வசூலை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதில் இந்தியாவில் மட்டும் இப்படம் 95.5 கோடி வசூலை வாரிக்குவித்து இருக்கிறது. இதுதவிர வெளிநாடுகளில் ரூ.5.5 கோடி வசூலித்துள்ளதாம்.

குஜராத்தி படங்கள் ’டாப்’

குஜராத்தி மொழியில் வெளியான படங்களில் இதுவரை எந்த ஒரு படமும் 100 கோடி வசூலை எட்டியதில்லை. இந்நிலையில், அந்த சாதனையை முதன்முறையாக படைத்துள்ளது லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம்.

காந்தாராவை பின்னுக்கு தள்ளிய படம்

200 மடங்கு லாபம் ஈட்டிய குஜராத்தி படம் இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய படமான காந்தாரா கூட, படத்தின் பட்ஜெட்டைவிட 90 மடங்கு தான் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால் லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் அப்படத்தின் பட்ஜெட்டை விட 200 மடங்கு அதிக லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது. குஜராத்தி திரையுலகை இப்படம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

லாலு கிருஷ்ண சதா சஹாயதே திரைப்படம் 100 கோடி வசூலைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இப்படம் 125 கோடி வரை வசூலை வாரிக்குவிக்கும் என திரைபிரியர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

====