Here is the list of top films that were most talked about among south indian films list 2025 google
சினிமா

இந்திய மக்கள் மத்தியில் பேசப்பட்ட டாப் படங்கள் : பட்டியல் இதோ!

Most Talked South Indian Films List 2025 : 2025ம் ஆண்டில் இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில், அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Baala Murugan

Su From So திரைப்படம்

Most Talked South Indian Films List 2025 : தெலுங்கில் வெளிவந்த தரமான காமெடி, திரில்லர் திரைப்படம் 'Su From So'. வயிறு வலிக்க சிரிக்கவைப்பதுடன் கொஞ்சம் திகிலூட்டும் இப்படம், அனைத்து மொழிகளிலும் செம ஹிட்டானது.இப்படம் வெளியான நாள் முதல் காமெடி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

பன்மொழிகளில் வெளியானதால் அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Court - State Vs. A Nobody திரைப்படம்

இதைத்தொடர்ந்து, இரண்டாவது இடமாக டீன் ஏஜ் இளைஞன் ஒருவனை பொய் வழக்கில் இருந்து காப்பாற்றும் வழக்கறிஞரின் கதை தான் Court - State Vs. A Nobody படத்தின் கதைக்களம். தெலுங்கில் வெளிவந்த இப்படம் ஹிந்தி சினிமா ரசிகர்களாலும் அதிகம் லைக் செய்யப்பட்டது.

எனவே இப்படமும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

டிராகன் திரைப்படம்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படம் தென்னிந்தியா அளவில் மிகவும் பிரபலமானது.

பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில், இப்படம் வணிக ரீதியாகவும் தமிழகத்தில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்

அறிமுக இயக்குனரான அபிஷன் திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி பெருமளவில் பேசப்பட்டது. சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரின் ஜோடியுடன் வெளியானது படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்தது.

தியேட்டரிலும் சரி, ஓடிடி தளத்திலும் சரி படம் செம ஹிட். தென்னிந்தியா மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் இப்படம் பிரபலமாகியது.

லோகா திரைப்படம்

மலையாள சினிமாவை மட்டுமன்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வாய்த்த திரைப்படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படமாக ஸ்டார் நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் இந்தியளவில் பேசப்படும் படங்களில் தற்போது லோகாவும் தன்னை முன்னிறுத்தி வருகிறது.

2025ல் மலையாளத்தில் வெளிவந்த மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'துடரும்'. மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஹிட்டானது.

மோகன்லால் நடிப்பில் ’துடரும்’

இதைத்தொடர்ந்து இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்துது. அதனடிப்படையில், இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது.

பொன்மேன் திரைப்படம்

பசில் ஜோசப் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'பொன்மேன்'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படமும் இந்திய அளவில், பேசப்பட்டு நல்லதொரு வணிக வசூலையும் பெற்றது.

ரோந்து திரைப்படம்

இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகளின் ஓர் பயணத்தை கூறும் திரைப்படம் 'ரோந்த்'. மலையாளத்தில் வெளிவந்த இப்படம், தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களாலும் அதிகம் ஈரக்கப்பட்டு, நல்லதொரு வரவேற்பை பெற்றது.இந்திய சினிமாவில் மக்களால் அதிகம் பேசப்பட்டு நல்லதொரு படங்களின் பட்டியலில் இப்படங்களே முதன்மை வகிக்கிறது.