அனிருத் இசையமைத்த ஐசிசி பாடல்
ICC Men’s T20 World Cup 2026 Official Song by Feel The Thrill ft. Anirudh Ravichander : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026-க்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியுள்ளார்.
'ஃபீல் தி த்ரில்'
'ஃபீல் தி த்ரில்' என்று இந்தப் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஐசிசி தனது எக்ஸ் பக்கத்தில், டி20 உலகக் கோப்பையின் சின்னமான தருணங்களைக் கொண்ட இந்தப் பாடலின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. இதன் ஆங்கில வரிகளை ஹெய்சன்பெர்க் எழுதியுள்ளார்.
யார் இந்த ஹெய்சன்பெர்க்
இந்நிலையில் ஹெய்சன்பெர்க் என்ற பாடலாசிரியர் தொடர்ந்து பல பாடல்களுக்கு வரிகள் எழுதி, மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறார்.
ஆனால், மனிதன் என்ற பெயரில் குறிப்பிடப்படும் என்ற இவரை இன்று வரை யாரும் பார்க்கவில்லை என்ற செய்தியே பரவலான ஒன்றாகும். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கம், அனிருத் இசை என்று இருவரும் ஒரு சேரும் படத்தில், ஹெய்சன்பெர்க் பாடல் இருக்கும்.
இதனால், இருவரில் யாரோ ஒருவர் தான் ஹெய்சன் பெர்க் என்று கிசுகிசு இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, யோகேஷ் மற்றும் அனிருத் ஆகிய இருவரிடமும் , ஒன்றாகவும், தனித்தனியாகவும் நேர்க்காணலில் ஹெய்சன்பெர்க் யார் என்ற கேள்விக்கு இன்று வரை விடை இல்லை.
இருவரும் மாறி மாறி பலவித கருத்துக்களை கூறி அவரை உயிருள்ளவர் என்ற கூறி வருகின்றனர். ஆனால், அது கற்பனை கதாபாத்திரமா, உயிருள்ளவரா என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இந்நிலையில், தற்போது ஐசிசி அதிகாரப்பூர்வ பாடலையும், ஹெய்சன்பெர்க் எழுதியுள்ளார் என்று தெரியவருகிறது.
ஐசிசி பாடல் வெளியீடு
ஐசிசி, பாடலைப் பகிரும்போது, "மிகப்பெரிய மேடைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடல். காத்திருப்பு முடிந்தது. மேஜிக் இங்கே உள்ளது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026-ன் அதிகாரப்பூர்வ நிகழ்வுப் பாடலை வழங்குகிறோம்: உணருங்கள். பாடுங்கள். வாழுங்கள்" என்று எழுதியுள்ளது.
'ஜெயிலர்', 'ஜவான்', 'மாஸ்டர்', 'பீஸ்ட்', 'லியோ', 'இந்தியன் 2' போன்ற படங்களில் இசையமைத்ததன் மூலம் அனிருத் ரவிச்சந்தர் அறியப்படுகிறார்.
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பாடலுக்கு, தற்போது பார்வையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த பாடலுக்கு அனிருத் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.