Is Dhanush's Film Being Postponed?  source: google
சினிமா

தனுஷ் படம் தள்ளிப் போகிறதா? 'இசைஞானி'யுடன் இணையும் மாரி செல்வராஜ்: புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'மஞ்சணத்தி' திரைப்படத்தைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் அடுத்ததாகப் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'வாழை - 2' திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kavitha prasanna

Is Dhanush's Film Being Postponed? Mari Selvaraj Joins Hands with 'Isaignani': Official Announcement of the New Film!

தமிழ்த் திரையுலகில் தனித்துவமான கதைக்களங்கள் மூலம் முத்திரை பதித்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது தனது புதிய திரைப்படத்தின் தலைப்பை 'மஞ்சணத்தி' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜின் பிளாக்பஸ்டர் வெற்றி

'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை மற்றும் பைசன் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படைப்பிற்கு 'மஞ்சணத்தி' என்று பெயரிட்டுள்ளார்.

'இசைஞானி'யுடன் இணையும் மாபெரும் கூட்டணி

இத்திரைப்படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, 'இசைஞானி' இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். மாபெரும் இசைக் கலைஞருடன் பணியாற்றுவது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

அதில் "நான் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த தருணம் இப்போது முழுமையாக நிறைவேறியுள்ளது" என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்

'மஞ்சணத்தி' எனும் இத்திரைப்படத்தை 'நவ்வி ஸ்டுடியோஸ்' பேனரில் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தயாரிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

தனுஷ் படம் தள்ளிப்போகிறதா?

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அத்திரைப்படம் தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது.

அடுத்தடுத்த அறிவிப்புகள்

'மஞ்சணத்தி' திரைப்படத்தைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் அடுத்ததாகப் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'வாழை - 2' திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக தன் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக வளர்ந்து நிற்கும் மாரி செல்வராஜின் இந்த புதிய அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

=====