Director Bhagyaraj's Funeral: Poornima's Moving Words – Parthiban's Interview! google
சினிமா

"நெருப்பில் உருகிடுமே..." - பாக்கியராஜ் இறுதிச்சடங்கில் பூர்ணிமா சொன்ன உருக்கமான விஷயம்; கண்கலங்கி பகிர்ந்த பார்த்திபன்!

இயக்குநர் பாக்கியராஜ் இறுதிச்சடங்கு: பூர்ணிமா சொன்ன உருக்கமான வார்த்தை - பார்த்திபன் பேட்டி!

Kavitha prasanna

இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் சமீபத்திய பேட்டியில்

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் பாக்யராஜின் நினைவுகளையும், அவரது இறுதிச்சடங்கின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களையும் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய பார்த்திபன், அவரது மறைவின் போது அனைத்து காரியங்களையும் முன்னின்று கவனித்துக் கொண்டார்.

குருவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை

பார்த்திபன் பேசுகையில், பாக்யராஜிடம் எப்படியாவது உதவி இயக்குநராக சேர வேண்டும் என்பதற்காக மொட்டை அடித்துக் கொண்டு பிரார்த்தனை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாக்கு பாக்யராஜ் போல எனக்கு பார்த்திபன்

பார்த்திபனை இயக்குநராக அறிமுகம் செய்ய பாக்யராஜ் திட்டமிட்ட போது, மற்றவர்கள் சந்தேகம் எழுப்பினாலும், "பாரதிராஜவிடமிருந்து ஒரு பாக்யராஜ் வந்தது போல, பாக்யராஜிடமிருந்து ஒரு பார்த்திபன் வருகிறார்" என்று பாக்யராஜ் தன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் என நெகிழ்ந்து பேசினார்.

கண்ணீரை வரவழைத்த இறுதி தருணம்

பாக்யராஜின் மறைவு செய்தி கேட்டு நிலைகுலைந்து போன பார்த்திபன், இயக்குநர் பாக்யராஜின் இறுதி சடங்கில் 9 அடியில் ஒரு பேனா மற்றும் எழுத்து அட்டையைத் தயார் செய்து, அவரது உடலுடன் மின்மயானத்திற்குள் அனுப்பியுள்ளார்.

இறுதி சடங்கில் கலங்கிய பூர்ணிமா

அப்போது தகனத்திற்கு முன்பாக பாக்யராஜின் மனைவி பூர்ணிமா, பார்த்திபனிடம் வந்து, "அவரின் கண்ணாடியைக் கழற்றிவிடலாமா? நெருப்பில் அது உருகி முகத்தில் காயத்தை ஏற்படுத்திவிடும்" என்று மிகவும் உருக்கமாகக் கேட்டுள்ளார்.

அது அவருடனேயே செல்லட்டும்

அதைக் கேட்டு தன் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த பார்த்திபன், "வேண்டாம், அது அவருடனேயே செல்லட்டும்" என்று கூறியுள்ளார். தங்களுக்குள் இருக்கும் மாறாத அன்பின் வெளிப்பாடுதான் அது என்றும் பார்த்திபன் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

=====