Jailer 2: A Mega Deal with Amazon Prime? Was the OTT License Sold for ₹160 Crores?
மீண்டும் வரும் டைகர் முத்துவேல் பாண்டியன்
Jailer 2 update: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி
முதல் பாகத்தில் ரஜினியின் மாஸ் ஸ்டைலும், அனிருத்தின் இசையும், வில்லனாக மிரட்டிய விநாயாகனின் நடிப்பும் உலகளவில் கொண்டாடப்பட்டது.
160 கோடிக்கு ஓடிடி ஒப்பந்தம்?
தற்போது இணையத்தில் கசிந்துள்ள தகவலின்படி, 'ஜெயிலர் 2' படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதலாக 60% உரிமம்
முதல் பாகத்தின் உரிமம் 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்திற்கு 60% கூடுதல் விலை பேசப்பட்டிருப்பதாக கசிந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையாக இருக்கும் பட்சத்தில்?
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட ஓடிடி உரிமங்களில் ஒன்றாக இது இருக்கும்.
படப்பிடிப்பு நிறைவு - முக்கிய அப்டேட்
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் சொன்ன அப்டேட்
ரஜினிகாந்த் அவர்களே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "படப்பிடிப்பு முடிந்துவிட்டது, தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கும்" என்று உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2-ல் நட்சத்திர பட்டாளம்
இரண்டாம் பாகத்திலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களைத் தொடர்கின்றனர்.
இரண்டாம் பாகத்தில் இணையும் நட்சத்திர பட்டாளம்
இவர்களுடன் கூடுதல் பலமாக எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்ச நட்சத்திரங்களின் வருகை எதிர்பார்ப்பு
மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோரும் கௌரவத் தோற்றத்தில் மீண்டும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
ஓடிடி உரிமம் மற்றும் படத்தின் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் சில நாட்களில் வெளியிடும் எனத் தெரிகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் ஜெயிலர் 2?
ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் மாதம் வெளியானதைப் போல, இரண்டாம் பாகமும் அதே ஆகஸ்ட் மாதத்தில் (2026) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=====