Jailer 2 Box Office First Day Collection Special Article
முதல் நாள் வசூல் சாதனை
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது.
அதிலும் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் மட்டும், குறிப்பாக உலகம் முழுவதும் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டும் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பாகத்தின் பிரம்மாண்ட வெற்றி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1 முதல்பாகம் உலகளவில் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் தற்போது ஜெயிலர் 2 இரண்டாம் பாகமும் வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றம்
ஜெயிலர் 1 முதல் பாகத்தில் சிவராஜ்குமார், மோகன்லால்,ரம்யா கிருஷ்ணன்,மிர்ணா மேனன்,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ள நட்சத்திரங்கள்
முதல் பாகத்தில் நடித்த பிரபலங்களுடன் சேர்ந்து இப்போது இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இத்திரைப்படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். அதன்படி விஜய் சேதுபதி, நமோ நாராயணா,மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
முந்தைய பாகம் போலவே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரசிகர்களின் கொண்டாட்டம் மற்றும் விமர்சனம்
முதல் பாகத்தில் யோகி பாபுவின் காமெடி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அதேபோல் தற்போது இரண்டாம் பாகத்திலும் யோகிபாபு, நமோ நாராயணா உள்ளிடோரின் நகைச்சுவைக் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மொத்தத்தில் ஜெயிலர் 2 காமெடி, ஆக்ஷன், எமோஷன் என அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
வார இறுதியில் ரூ.200 கோடி வசூல் சாத்தியமா?
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பினால் முதல் நாளில் மட்டும் ரூ.125 கோடி வசூலித்துள்ளது.
முதல் நாளிலேயே இவ்வளவு வசூல் என்றால் வார இறுதியில் ஜெயிலர் 2, ரூ.200 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி, இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டிவிடுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
==============