Actor Namo Narayana Joins Rajinikanth Tharman Movie source:google
சினிமா

ஜெயிலர் 2 காம்போ ரிப்பீட் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தில் நமோ நாராயணா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

அமெரிக்கா, துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் உயர்பதவியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நமோ நாராயணா, சினிமா மீதான தீவிர ஈர்ப்பால் அத்துறையை விட்டுவிட்டு நடிகராக உருவெடுத்தார்.

Kavitha prasanna

Actor Namo Narayana Joins Rajinikanth Tharman Movie

ஜெயிலர் 2 மாபெரும் வெற்றியும் 'பழக்கடை மூர்த்தி' கதாபாத்திரமும்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் ரூ. 750 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. கிட்டத்தட்ட ரூ.1000 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களைக் கவர்ந்த 'பழக்கடை மூர்த்தி'

குறிப்பாக, இத்திரைப்படத்தின் முதல் பாதியில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதில் 'பழக்கடை மூர்த்தி' என்ற கதாபாத்திரத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் ’நாடோடிகள்’ புகழ் நடிகர் நமோ நாராயணா.

'தர்மன்' திரைப்படத்தில் இணைந்த நமோ நாராயணா

நமோ நாராயணாவிற்கு ஜெயிலர் 2 திரைப்படத்தில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்திலும் படக்குழுவினர் அவரை முக்கியக் கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தர்மனில் நட்சத்திரப் பட்டாளம்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா, ராம் போத்தினேனி மற்றும் யோகி பாபு போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் நிலையில், நமோ நாராயணாவின் சேர்க்கை படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

மென்பொருள் பொறியாளர் TO திரையுலக சாதனை

அமெரிக்கா, துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் உயர்பதவியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நமோ நாராயணா, சினிமா மீதான தீவிர ஈர்ப்பால் அத்துறையை விட்டுவிட்டு நடிகராக உருவெடுத்தார்.

'நாடோடிகள்' திரைப்படம் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய இவர், ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து தன் தனித்துவமான நடிப்பைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

==========