ஜனநாயகன் படக்குழு
Jana Nayagan Audio Launch Malaysia Date Update in Tamil : விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி 55 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா
படத்தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் இது சார்ந்த ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மலேசியாவின் ட்வின் டவர்ஸ் இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தின் இசை வெளியீட்டு விழா அங்கு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் புக்கிட் ஜலீல் ஸ்டேடியம், கோலாலம்பூர் மலேசியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்
இந்த திடீர் அறிவிப்பை எதிர்பார்க்காத ரசிகர்கள், உணர்வுப்பூர்வமாக தளபதியின் ஆரம்ப சினிமாவில் உள்ள ஃபிரேமில் இருந்து தற்பொழுது வெளியாகவுள்ள சிறிய காணொளி வரை இடம்பெற்றுள்ளது, தற்பொழுது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில். இதிலும் குறிப்பாக அவரது ரசிகர்கள் அவரின் வருகையை எதிர்நோக்குவதாகவும், அன்புநிறைந்த வார்தைகளுடனும் கண்ணீர் மல்க இந்த காணொளி வெளிவந்துள்ளது.
தற்பொழுது வெளிவந்துள்ள இந்த காணொளி 1 மணி நேரத்தில், 1 லட்சத்து 30 ஆயிரம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. தமிழகத்தில் தவெக என்னும் கட்சி தொடங்கி மாபெரும் அரசியல் ஜாம்பவான்களுடன், தன்னை நிலைநிறுத்தி பல்வேறு இன்னல்களுக்கு இடையில் வளர்ந்து கொண்டிருக்கும் இவரின் கடைசி படமே ஜனநாயகன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு உலகளவில் உச்சம் தொட்டுள்ள நிலையில், வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ள படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.