Jana Nayagan Release Date Update source :google
சினிமா

’ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி? தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை, தேர்தல் அதிகாரி விளக்கம்!

Jana Nayagan Release Date Update : தேர்தல் ஆணையம் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபனை இல்லை எனக் கூறினால் மட்டும் தான் தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட முடியும்.

S Kavitha

Jana Nayagan Release Date Update :

ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்த சென்சார் குழுவினர், இந்திய தேர்தல் ஆணையம் பார்வையிட பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார்.

விஜயின் கடைசி திரைப்படம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பின் விஜய்யின் கடைசி படமாக உருவான ஜனநாயகன், ஜனவரி மாதமே வெளியாகவிருந்த நிலையில், தற்போது வரை தணிக்கை சான்று பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்த தணிக்கை குழுவினர் கடந்த செவ்வாயன்று , மும்பையில் ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்த்து முடித்தனர்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்

இதற்கிடையே தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்சாம் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

தமிழக தேர்தலில் களமிறங்கும் விஜய்

அதன்படி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள்

தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஜனநாயகன் படத்தில் அரசியல் சார்ந்த கருத்துகள் இருக்கிறது.

அதனால் தேர்தல் ஆணையம் இத்திரைப்படத்தை பார்வையிட வேண்டும் என்று மறுதணிக்கை குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

தேர்தல் ஆணையர் விளக்கம்

தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் , தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ஒரு கட்சியின் தலைவராகவும் வேட்பாளராகவும் கருதப்படும் நடிகரின் திரைப்படம் வெளியாக இருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ஆலோசனை

அதனால் அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் ஒரு நடிகரின் படம் (ஜனநாயகன்) தேர்தல் நேரத்தில் வெளியாவதற்குத் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி தேவையா? இல்லையா என்பது குறித்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து விரைவில் விரிவான பதில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசியல் வசனம், கருத்து

தேர்தல் ஆணையர் விளக்கமளித்துள்ள நிலையில், ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு முன் வெளியாகுமா? இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இருப்பினும் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் சார்ந்த கருத்துகள் அல்லது வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கக் கூடாது.

அதன்படி தேர்தல் ஆணையம் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு ஆட்சேபனை இல்லை எனக் கூறினால் மட்டும் தான் தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட முடியும்.

தேர்தலுக்கு பின் ஜனநாயகன் ?

ஆனால் ஜனநாயகன் படத்தில் அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தான் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

======