Jana Nayagan Release Tomorrow CM Vijay Last Movie 8000 Screens Worldwide ai
சினிமா

தடைகளை உடைத்து நாளை வெளியாகும் 'ஜனநாயகன்' : கடந்து வந்த பாதை! : விஜயின் 32 ஆண்டு திரைப்பயணம் நிறைவு பெறுகிறது..!

தடைகளை உடைத்து நாளை உலகமெங்கும் வெளியாகிறது 'ஜனநாயகன்'. தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் குறித்த முழு தொகுப்பு.

Kavitha prasanna

Jana Nayagan Release Tomorrow CM Vijay Last Movie 8000 Screens Worldwide

'ஜனநாயகன்' கடந்து வந்த பாதை

]தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதலமைச்சர் விஜய் கடைசியாக நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் 8,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

32 ஆண்டுகாலத் திரையுலகப் பயணத்தின் உச்சத்தில், ஒரு நடிகர் தனது கடைசி படம் ரிலீஸாவதற்கு முன்பே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்திய சினிமா வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

அறிவிப்பு முதல் ரிலீஸ் வரை

2024-இல் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், இனி முழுநேர அரசியல் என்றும், கையிலிருக்கும் ஒரே ஒரு படமே தனது திரைப் பயணத்தின் கடைசிப் படம் என்றும் அறிவித்தார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் 'தளபதி 69' தொடங்கியது.

ரீமேக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

தெலுங்கு 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என்ற வதந்தி பரவியபோது, "இது ரீமேக் அல்ல; தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட பியூர் பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர்" என இயக்குநர் எச். வினோத் முற்றுப்புள்ளி வைத்தார்.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ‘நான் ஆணையிட்டால்’ சர்ச்சை

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற வாசகம் இடம் பெற்றதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதேபோல, ரசிகர்களுடன் விஜய் செல்ஃபி எடுப்பது போன்ற போஸ்டர், 2026 தேர்தலுக்கான மாநாட்டு ரிகர்சல் எனப் பேசப்பட்டது.

கரூர் சம்பவமும் சென்சார் முடக்கமும்

ஜனவரி 9, 2026 பொங்கல் ரிலீஸாக வரவேண்டிய இப்படம், கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் சர்ச்சைகள் மற்றும் சென்சார் போர்டின் கடுமையான தடைகளால் தள்ளிப்போனது.

காட்சிகள் கசிவு மற்றும் இயக்குநர் ஆவேசம்

படத்தின் முக்கிய HD காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதற்கு, "400 கோடி பட்ஜெட் படத்தை யாராவது வேணுமென்றே லீக் செய்வானா? இது பொறாமையால் செய்யப்பட்ட துரோகம்" என வினோத் தெரிவித்திருந்தார்.

மலேசியாவில் 'தளபதி திருவிழா'

டிசம்பர் 27, 2025 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள 'புக்கிட் ஜலில் தேசிய மைதானத்தில்' 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்க, மலேசிய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்து பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் நடைபெற்றது.

இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறை

நீதிமன்ற போராட்டங்களுக்குப் பிறகு, 6 முதல் 7 மாத கால தாமதத்திற்குப் பின் CBFC இப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கியது. இறுதியாக ஜூலை 14 அன்று 41 வினாடிகள் காட்சிகள் சேர்க்கப்பட்டு, 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 52 வினாடிகள் ரன்டைமுடன் தணிக்கை செய்யப்பட்டது.

டைட்டில் கார்டில் மாண்புமிகு முதல்வர்

முன்னதாக எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்ற மாபெரும் நடிகர்கள் முதலமைச்சராவதற்கு முன்பே நடிப்பதை நிறுத்திவிட்டனர் அல்லது முதலமைச்சரான பின் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

ஆனால், முதலமைச்சரான பிறகு ஒரு நடிகரின் படம் திரைக்கு வந்து, அதன் டைட்டில் கார்டில் 'The Honourable Chief Minister of Tamil Nadu in and as Jana Nayagan' என்று போடுவது இதுவே முதன்முறையாகும்.

32 ஆண்டுகள்... 69 படங்கள்... வெள்ளத்திரையில் இனி 'நடிகர்' விஜய்யைப் பார்க்க முடியாது என்ற வலியோடு, 'மாண்புமிகு முதலமைச்சர்' விஜய்யின் இந்த வரலாற்று ரீரிலீஸைக் கொண்டாட உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

=====