IMDb பட்டியலில் நட்சத்திரங்கள் :
Rishab Shetty IMDb Ranking in Most Popular Celebrities : நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி தற்போது இந்திய சினிமாவால் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். ஹோம்பேல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிரகந்தூர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்லாமல், ஐஎம்டிபி (IMDb) பட்டியலில் பிரபலங்கள் மத்தியில் ஒரு தனித்துவத்தை எட்டியுள்ளது.
காந்தாரா சாப்டர் 1 கதை
காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற பகுதியில் அரிய வகையான மிளகு, ஏலக்காய், தேன், பட்டை போன்றவை கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் தெய்வ சக்தியும் இருப்பதால், அந்த இடத்தை அடைய பல குழுக்கள் முயற்சி செய்கின்றன். அது மட்டுமல்லாமல் ராஜா ஒருவரும், அவரின் வாரிசுகளும் அந்த இடத்தை அடைய நினைக்கின்றனர். இதனால், நடக்கும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றுகிறதா.இல்லையா.. பிறகு நடந்தது என்பதுதான் இந்த திரைப்படத்தில் கதை.
காந்தாரா இயக்கம்
காந்தாரா முதல் பாகத்தில், ஒவ்வொரு சம்பவமும் உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டதே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும், திரைக்கதையும், நடிப்புத் திறனும் ரசிகர்களையும் படத்தையும் அவ்வளவு இணக்கமாக ஒருங்கிணைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் படத்தை அனைவரும் புகழ்ந்து வருவதால், திரையரங்குகளில் மக்கள் குவித்து வருகின்றனர்.
காந்தாரா வசூல் :
ரூ.450 கோடி வசூல்: ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இந்த படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிகளில் வெளியிடப்பட்டது. இது ரிஷப் ஷெட்டியின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தி உள்ளது.125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், காந்தாரா சாப்டர் 1திரைப்படம் வெளியான ஏழாவது நாளில் உலகளவில் ₹450 கோடி வசூலை அள்ளி(Kantara Movie Box Office Collection) தொடர்ந்து தியேட்டரில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
காந்தாரா நாயகர்களுக்கு அங்கீகாரம் :
இதன் மூலம் ரிஷப் ஷெட்டி இந்திய சினிமா உலகில் முழுவதும் பேசப்படும் நபராக மாறி உள்ளார். ஐஎம்டிபி வெளியிட்டுள்ள வாராந்திர தரவரிசைப் பட்டியலில், ரிஷப் ஷெட்டி 75வது இடத்திலிருந்து 3வது(Rishab Shetty IMDB Rating) இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல, இந்தப் படத்தில் அவருடன் நடித்த ருக்மணி வசந்த் 37வது இடத்திலிருந்து 5வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவையா 213வது இடத்திலிருந்து 22வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். 'காந்தாரா: சாப்டர்1' திரைப்படம் இந்திய முழுவதும் ரசிகர்களுடன் எந்த அளவுக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தப் படம் அனைவரின் மனங்களை வென்று, வெற்றி வாகை சூடியுள்ளது.
காந்தாரா படத்தின் முக்கியமானவர்கள்
கடலோர கர்நாடகத்தின் இயற்கை அழகை அற்புதமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப் மற்றும் படத்தின் ஆன்மீக, உணர்வுபூர்வமான கருவுக்கு உயிர் கொடுத்த இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் ஆகியோரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி, புராணம், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நம்பிக்கையை ஒன்றிணைத்து ஒரு வலுவான கதையை உருவாக்கியுள்ளார், படம் எடுப்பதில் மட்டுமல்லாது வசூலிலும் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க : Kantara: Chapter -1 : ’ரிஷப் ஷெட்டி’யை புகழ்ந்து தள்ளும் ராஜமௌலி
காந்தாராவின் அடுத்த பாகம்
கலாச்சாரம் மற்றும் உணர்வுகள் நிறைந்த இந்தக் கதை, முதல் 'காந்தாரா' படத்தைப் போலவே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்படத்தின் இறுதியில் ரிஷப்ஷெட்டி தி லிஜெண்ட் என படத்தின் அடுத்த பாகம் வரவுள்ளது என காந்தரா ரசிகர்களுக்கு ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார். காந்தரா சாப்டர் 1 வசூல் உச்சத்தை தொட்டு, மக்கள் மனதை வென்றுள்ள நிலையில், அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.