Keerthy Suresh's film 'Dorothy': 'Muthumani' song sung by Ilaiyaraaja released!
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம்: டோரதி
கார்த்திக் சுப்புராஜ் - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகும் "டோரதி" படத்தின் முத்துமணி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் - கீர்த்தி சுரேஷ் கூட்டணி
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “டோரதி”.
மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களம்
மதுரையை மையமாகக் கொண்டு புதுமையான கதைக்களத்துடன் உருவாகும் டோரதி எனும் இப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசை
சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இடம்பெறும் தரத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
"முத்துமணி" பாடல் வெளியீடு
இந்நிலையில், இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைச்சு பாடியுள்ள “முத்துமணி” எனும் புதிய பாடலை இன்று (ஆகஸ்ட் 29) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முத்துமணி பாடலின் வீடியோவை பரத் முரளிதரன் இயக்கியுள்ளார்.
முந்தைய பாடலுக்கு கிடைத்த வரவேற்பு
இப்படத்தின் "கல்யாண விருந்து" எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோணி தாசன் பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை: பாடகி ஷ்ரேயா கோஷலின் 'கல்யாணி' பாடல் இமாலய வெற்றி!
======