KVN Productions Withdraw Jana Nayagan Censor Certificate Issue Case after High Court Judgement Update News in Tamil Source : KVN Productions
சினிமா

விஜயின் ஜன நாயகன்- வழக்கை வாபஸ் செய்த தயாரிப்பு நிறுவனம்!

Censor : ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்ற திட்டமிடல் ரத்து செய்யப்பட்டு, உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்ததால். இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Baala Murugan

ஜனநாயகன் வழக்கு

KVN Productions Withdraw Jana Nayagan Censor Issue Case Update : ஜனநாயகன் சர்ச்சை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி, கடந்த டிச. 22 அன்று திரைப்படத்திற்கு யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியது. தயாரிப்பாளரும் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால், பாதுகாப்புப் படைகளை எதிர்மறையாக சித்தரிப்பது மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துவது போல காட்சிகள் படத்தில் இடம்பெற்று இருக்கிறது என்று கூறி, ஜனவரி 5 அன்று தணிக்கை வாரியம் படத்தை திருத்தக்குழுவுக்கு அனுப்பியது.

வெளியீடு தாமதம் இது வெளியீட்டை தாமதப்படுத்தியது. ரூ.500 கோடியில் உருவான இந்த திரைப்படம், பொங்கல் திருவிழாவை ஒட்டி வெளிவர வேண்டும் என்று யோசித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, வாரியம் 2 வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்

ஆனால், தணிக்கை வாரிய உறுப்பினர் மேல் முறையீடு செய்ததையொட்டி , இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்பட்டது. இதனால், தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால், உயர் நீதிமன்றத்தையே நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஜன.27 அன்று, உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதிகள் அமர்வு ஒற்றை நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. தணிக்கை வாரியத்துக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கை புதிதாக விசாரிக்க உத்தரவிட்டது. இது வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தி, குறிப்பிட்ட நாளை குறிப்பிடமால் தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்த சூழலில், தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது.

வாபஸ் பெறுவதற்கான காரணம்

வழக்கு காரணமாக பட வெளியீடு தள்ளிப்போவதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை வாரியத்துடனான சட்டப் போராட்டத்தால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவது படத்தை இன்னும் காலதாமதப்படுத்தும் எனத் தயாரிப்புத் தரப்பு கருதுகிறது. ரசிகர்கள் கோரிக்கை நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரித்தால் அதற்குப் பல வாரங்கள் ஆகலாம்.

அதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டு குழு முன்பாகச் சென்றால் 10 முதல் 20 நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழைப் பெற்றுவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது படம் குறித்த வழக்கை வாபஸ் பெற்றுள்ள நிறுவனம், அடுத்த கட்டமாக தணிக்கை நிறுவனத்தின் ஒப்புதலுடன் மீண்டும் படத்தை சரிசெய்து, படத்தை வெளியிடுவர் என்று தெரியவருகிறது. ஜனநாயகன் படம் குறித்து தொடர்ந்து, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இப்படம் மீதான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டு, ரசிகர்களை காத்திருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது ஜனநாயகன் திரைப்படம். எனவே, பொருத்திருந்து பார்ப்போம், படத்தின் வெளியீடும் அதன் கொண்டாட்டமும் எப்படி இருக்கும் என்று.