சினிமா

லெஜெண்ட் சரவணனின் புதிய படம் : தீபாவளிக்கு வெளியாகிறது

இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் தனது புதிய திரைப்படம் இருக்கும் என்று லெஜெண்ட் சரவணன் தெரிவித்தார்.

MTM

காக்கிச் சட்டை, கொடி, கருடன் படங்களின் இயக்குநர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தனது உறவினர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். படத்தை தீபாவளிக்கு உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

மாஸ், ஆக்க்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும், டைட்டிலும் மாஸாக இருக்கும். ஒரு புதிய ஜானரில் இப்படம் அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும். மொத்தத்தில் வரும் தீபாவளி நம்ம தீபாவளியாக, அனைவரின் தீபாவளியாக இருக்கும்.

இவ்வாறு லெஜெண்ட் சரவணன் தெரிவித்தார்.