'Moondram Pirai' in Digital Format After 44 Years: The Evergreen Classic Film Releases on Amazon Prime! source: google
சினிமா

44 ஆண்டுகளுக்குப் பின் டிஜிட்டல் வடிவில் 'மூன்றாம் பிறை': அமேசான் பிரைமில் வெளியாகும் எவர்கிரீன் கிளாசிக் திரைப்படம்!

அமேசான் பிரைமில் 'மூன்றாம் பிறை': டிஜிட்டல் வடிவில் வெளியாகும் பாலு மகேந்திராவின் கிளாசிக்!

Kavitha prasanna

'Moondram Pirai' in Digital Format After 44 Years: The Evergreen Classic Film Releases on Amazon Prime!

44 ஆண்டுகளுக்குப் பின் டிஜிட்டல் வடிவில் 'மூன்றாம் பிறை'

தமிழ் திரையுலக வரலாற்றில் என்றும் அழியாத காவியங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'மூன்றாம் பிறை' திரைப்படம், 44 ஆண்டுகளுக்குப் பின் தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் வெளியாகிறது.

நாளை அமேசான் பிரைமில் ரிலீஸ்

இப்படம் நாளை (மே 1) அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலு மகேந்திராவின் கலைப்படைப்பு

கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை, இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்திருந்தார்.

இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காவியம்

சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில் உருவான இப்படம், உணர்வுப்பூர்வமான கதை சொல்லலால் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய சினிமாவின் மைல்கல்

இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பு, இந்திய சினிமாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விருதுகளை அள்ளிக்குவித்த திரைப்படம்

குறிப்பாக, இப்படத்திற்காக கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதான 'சிறந்த நடிகருக்கான விருதைப்' பெற்றார். பாலு மகேந்திரா சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதை வென்றார்.

இளையராஜாவின் இசையில் உருவான "கண்ணே கலைமானே" பாடல் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

ஓராண்டு காலம் திரையரங்கில் ஓடிய சாதனைப் படம்

பிலிம்பேர் தென்னிந்தியாவின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் பல தமிழக அரசு விருதுகளைக் குவித்த இப்படம், இந்தியா முழுவதும் தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது.

ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகும் மூன்றாம் பிறை திரைப்படம், பழைய நினைவுகளை அசைபோடும் ரசிகர்களுக்கும், இன்றைய இளம் தலைமுறையினருக்கும் ஒரு அற்புதமான கலைப் படைப்பை மீண்டும் ரசிக்கும் அரிய வாய்ப்பாக அமையும்.

=====