தேசிய தலைவர் திரைப்படம் வெளியீடு :
Muthuramalinga Thevar Biopic Desiya Thalaivar Movie Release Date : பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்கிற படமாக உருவாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது, தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ப செயல்பட்டவர் பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர்.
படத்தின் இயக்கம்
இந்த படத்தில் சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியது உள்பட பிற முக்கிய நிகழ்வுகளும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது தேசத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாண்டி அவரை பலரும் கடவுளுக்கு நிகராக மதித்து கொண்டாடும் நிலையில், அவர் கூறிய வாழ்வியல் கருத்துகளையும் பின்பற்றுகின்றனர். இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது ஒவ்வொரு சாதனையும், அவர் பின்பற்றிய வாழ்வியல் முறைகளும், எளிமையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
படத்தின் நாயகர்கள்
நடிகர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷிர் கச்சிதமாக நடித்துள்ளார், பிற கதாப்பாத்திரங்களும் கதைக்கு ஏற்ப நடித்து அசத்தியுள்ளனர். இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார், இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்த நிலையில், அகிலன் ஷியாலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்தது.
மேலும் படிக்க : தேவர் ஜெயந்தி, குருபூஜை : பசும்பொன்னில் துணை ஜனாதிபதி CPR மரியாதை
டிரைலர் வரவேற்பு
இப்படம் வெளியிடுவதற்கு 8 நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர், தற்பொழுது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்துள்ளது. தேசத்தலைவர் என்னும் பெயரில், தேவர் ஜெயந்தி அன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.