No Intention to Hurt or Tarnish the 'King of Music': 'Karuppu' Film Crew Expresses Regret! source:google
சினிமா

இசை அரசனை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் எண்ணம் இல்லை : கருப்பு படக்குழு வருத்தம்!

இசைஞானி இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை என்று கருப்பு திரைப்படக்குழு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Kavitha prasanna

No Intention to Hurt or Tarnish the 'King of Music': 'Karuppu' Film Crew Expresses Regret!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம்

நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் கடந்த வாரம் உலகமெங்கும் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கருப்பு திரைப்படக்குழு வருத்தம்

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை என்று கருப்பு திரைப்படக்குழு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி மீது எழுந்த விமர்சனம்

கருப்பு திரைப்படத்தில் பணத்திற்காக ஆசைப்பட்டு உண்மைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராடுவது போன்றதொரு காட்சி இடம்பெற்றுள்ளதாகவும் அந்த காட்சியில் இசைஞானியின் ஒரு பாடலை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பயன்படுத்தி இருப்பது தான் தற்போது பல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இசைஞானி காப்புரிமை அவமதிப்பு?

’போராடடா வாளேந்தடா’ என்னும் அப்பாடல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைக்கான பாடலாக இருந்து வருகிறது.

அப்படிப்பட்ட ஒரு பாடலை கருப்பு திரைப்படத்தில் தேவையற்ற இடத்தில் பயன்படுத்தி உள்ளது மட்டுமின்றி, இளையராஜாவின் காப்புரிமை உரிமையையும் கிண்டலடித்து இசைஞானி இளையராஜாவை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அவமதித்து இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக கருப்பு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக இசையிலகில் ஆட்ச்ஹி செய்யும் இசை அரசனை காயப்படுத்தும் , களங்கப்படுத்தும் எண்ணம் எங்களக்கு சிறிதளவும் இல்லை. இதுவொரு தற்செயல் நிகழ்வுதான்.

கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பதை இசைஞானி இளையராஜாவிற்கு கடத்தும் நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டது.

தாழ்மையான வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்

எனினும் எந்த வித உள்நோக்கமுமின்றி எடுக்கப்பட்ட அந்த காட்சியினால் இசைஞானி இளையராஜாவின் ரசிகர்களோ, தாங்களோ, தங்களைச் சார்தவர்களோ யாராக இருந்தாலும் உங்களது மனது காயப்பட்டிருந்தால் எங்களின் தாழ்மையான வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

=====