Oscar Winners 2026: A First in Oscar History—Female Cinematographer Wins Best Cinematography Award!
Oscar Award :
சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். அதன்படி இந்த ஆண்டின் 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது.
திரைத்துறை ஜாம்பவான்கள்
இந்த விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் ’கோனன் ஓ பிரைன்’ தொகுத்து வழங்கினார்.
திரைத்துறையில் புதிதாக சாதனை செய்தவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சிகப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
98 ஆவது ஆஸ்கர் விருது விழாவில் Sinners மற்றும் One Battle After Another திரைப்படங்கள் முக்கிய விருதுகளை வென்றுள்ளன.
One Battle After Another மற்றும் Sinners
One Battle After Another மட்டும் 6 விருதுகளை வென்றுள்ளது. Sinners படத்திற்காக சிறந்த நடிகர் விருதை மைக்கேல் பி. ஜோர்டான் பெற்றார்.
Hamnet படத்திற்காக சிறந்த நடிகை விருதை ஜெஸ்ஸி பக்லி பெற்றார். சிறந்த துணை நடிகை, நடிகருக்கான விருதை முறையே Weapons படத்திற்காக அமி மடிகன், One Battle After Another படத்திற்காக சீன் பென் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த அசல் மற்றும் தழுவல் கதை
மேலும் சிறந்த அசல் கதைக்கான விருதை Sinners படத்திற்காக ரையன் கூக்ளரும், சிறந்த தழுவல் கதைக்கான விருதை One Battle After Another படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளில் சில வரலாற்று சாதனைகளும் இடம் பெற்றுள்ளன.
ஆஸ்கர் வரலாற்றில் முதல்முறையாக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை துரால்ட் அர்காபா (Autumn Durald Arkapaw)பெற்றுள்ளார் .
முதல் பெண் ஒளிப்பதிவாளர்
'Sinners' திரைப்படத்தின் சிறந்த ஒளிப்பதிவிற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பிரிவில் விருது வென்றுள்ள முதல் பெண் என்ற பெருமையை Turalt Arkaba பெற்றுள்ளார்.
'சிறந்த காஸ்டிங்' விருது
அதேபோல் ஆஸ்கார் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு 'சிறந்த காஸ்டிங்' விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இதை One Battle After Another படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸ் வென்றுள்ளார்.
கே-பாப் பாடலுக்கு ஆஸ்கர் விருது
மேலும் இந்தமுறை கே-பாப் பாடலுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. கே-பாப் டெமன் ஹண்டர்ஸ் படத்தின் "கோல்டன்" பாடலானது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் கே-பாப் பாடல் என்ற புகழையும் பெற்றுள்ளது.
===