Oscars 2027 International Feature Film India Entries Gondhal, Angh source:google
சினிமா

ஆஸ்கர் 2027 சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிடும் 2 இந்தியப் படங்கள்!

ஆஸ்கர் 2027 விருதுகளின் சர்வதேச திரைப்படப் பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து 104 படங்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், 2 இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது.

Kavitha prasanna

Oscars 2027 International Feature Film India Entries Gondhal, Angh

சர்வதேச திரைப்படப் பிரிவில் இடம்பிடித்த 2 இந்தியப் படங்கள்

உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆஸ்கர் விருதுகளின் 'சர்வதேச திரைப்படங்கள்' இந்தியாவிலிருந்து இரண்டு திரைப்படங்கள் ஆங்கிலம் அல்லாத பிறமொழிப் படம் பிரிவின் கீழ் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 104 திரைப்படங்கள் இந்தப் பிரிவில் போட்டியிடுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் சார்பில் கீழ்க்கண்ட இரு திரைபடங்கள் தேர்வாகியுள்ளன.

1. கோந்தல் (Gondhal): மராத்தி மொழியில் உருவான த்ரில்லர் திரைப்படம்.

2. ஆங்க் (Angh): நாகாலாந்தைச் சேர்ந்த இயக்குநர் தேஜா ரியோ இயக்கிய கோன்யாக் பழங்குடியின மொழித் திரைப்படம்.

2027 ஆஸ்கர் விழா தேதி

தகுதிப் பட்டியல் என்பது குறிப்பிட்ட பிரிவு விருதுக்கான போட்டியில் படங்கள் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதைக் குறிக்கும். இந்த 104 திரைப்படங்களில் இருந்து முக்கியமான படங்கள் முதல்கட்டத் தேர்வு செய்யப்பட்டு, அதன்பின்னர் இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்படும்.

இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் திரைப்படத்திற்கு, பிற பிரிவு விருதுகளுடன் சேர்த்து வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட விழாவில் ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: 53 பந்துகளில் 204 ரன்கள்: லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் மற்றும் இரட்டை சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை!

==============