Parasakthi vs Jananayagam Pongal 2026 Release Date Update in Tamil Google
சினிமா

’ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி’ : ஜனவரி 10ம் தேதி வெளியீடு

Parasakthi vs Jananayagam Pongal 2026 Release Date : திரைப்பட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 10 தேதி பராசக்தி படம் வெளியிடும் முடிவை எடுத்துள்ளோம் என டான்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Baala Murugan

பராசக்தி திரைப்பட அப்டேட்

Parasakthi vs Jananayagam Pongal 2026 Release Date in Tamil : சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரம் செய்யப்பட்டது.

சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’.டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

டான் பிக்சர்ஸ் அறிவிப்பு

இந்தப் படம் எதிர்வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம். “பராசக்தி திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி அன்று முன்கூட்டியே ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை அறவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள், படத்தை திரையிடும் திரைப்பட உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளோம்” என படத்தை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

விஜய்- சிவகார்த்திகேயன் படம் மோதல்

ஜனவரி 9-ம் தேதி அன்று விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இப்படம் அடுத்த நாள் வெளியாக உள்ளது. முண்ணனி நட்சத்திரமாக விஜய் அவர்களுக்கு இணையாக தற்போது சிவகார்த்திகேயன் திரைப்படமும் வெளிவந்து மோதவுள்ளது.

நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக தற்போது உருவெடுத்துள்ள நிலையில், அவரது இறுதி படம் இதுதான் என விஜய் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இறுபடத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உச்சம் தொட்டுள்ளது.

================