‘Pavazha Malli’ Surpasses 100 Million Views to Set a World Record: source: google
சினிமா

‘பவழ மல்லி’ 10 கோடி பார்வைகளைக் கடந்து உலக சாதனை : இசை உலகில் புதிய சரித்திரம் படைக்கும் சாய் அபயங்கர்!

கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியான பவழ மல்லி பாடல், வெளியான ஒரு சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.

S Kavitha

‘Pavazha Malli’ Surpasses 100 Million Views to Set a World Record: Sai Abhyankar Creates New History in the World of Music!

தமிழ் திரையிசை உலகில் தற்போது எங்கு திரும்பினாலும் சாய் அபயங்கரின் பெயர் தான் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு தனது அபாரமான இசைத் திறமையால் இளைஞர்களைக் கட்டிப்போட்டுள்ளார் 21 வயது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.

10 கோடி பார்வைகளை கடந்து சாதனை

தற்போது சாய் அபயங்கர் இசையமைத்துப் பாடிய ‘பவழ மல்லி’ ஆல்பம் பாடல், யூடியூப்பில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வைகளைக் கடந்து ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

43 நாட்களில் பவழ மல்லியின் அசுர சாதனை

கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியான பவழ மல்லி பாடல், வெளியான ஒரு சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது.

சாய் அபயங்கரின் புதிய சாதனை

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இப்பாடல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக, வெறும் 43 நாட்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து ஆல்பம் பாடல்கள் பிரிவில் ஒரு புதிய சாதனையை சாய் அபயங்கர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமான கூட்டணி

இந்த வெற்றியின் பின்னால் ஒரு வலிமையான கூட்டணி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் அபயங்கர் பவழமல்லி பாடலைப் பாடியுள்ளார்.

கயாடு கோஹர் நடனம்

இவர்களது தனித்துவமான குரல்கள் பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. மேலும், இப்பாடலில் நடிகை கயாடு லோஹர் தனது துடிப்பான நடனத்தால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இசைப் பாரம்பரியமும் எதிர்காலமும்

தமிழ் திரையுலகின் முன்னணிப் பாடகர்களான திப்பு - ஹரிணி தம்பதியினரின் மகன் தான் சாய் அபயங்கர்.

’கட்சி சேர’ ஆல்பம் பாடல்

ஏற்கனவே ‘கட்சி சேர’ என்ற ஆல்பம் பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர், தற்போது தென்னிந்தியாவின் பிரபலமான இசையமைப்பாளராக மாறியுள்ளார்.

டியூட் படத்தில் அறிமுக இசையமைப்பாளர்

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படத்தின் மூலம் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு, தற்போது கைவசம் 6 திரைப்படங்கள் உள்ளன.

சாய் அபயங்கரின் அடுத்தடுத்த வெளியீடுகள்

இதில் ‘கருப்பு’ திரைப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் அட்லீ மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் இணையும் ‘ராக்கா’ படத்திற்கும் இவரே இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘திங்க் மியூசிக் இந்தியா’ பாராட்டு

இந்தத் தொடர் வெற்றிகளை முன்னிட்டு, ‘திங்க் மியூசிக் இந்தியா’ நிறுவனம் அவருக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இளம் கலைஞர்களுக்கு முன்னுதாரணம்

ஒரு முதல் தலைமுறை வாரிசாக இருந்தாலும், தனது கடின உழைப்பால் இசை உலகில் தனி இடத்தைப் பிடித்துள்ள சாய் அபயங்கரின் பயணம் பல இளம் கலைஞர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

====