PVR INOX Launch Indias First Dine In Cinema at M5 ECity Mall in Bengaluru 
சினிமா

PVR : உணவு சாப்பிட்டவாறே படம் பார்க்கலாம் : பெங்களூருவில் அறிமுகம்

PVR INOX Launch Indias First Dine In Cinema at M5 ECity Mall in Bengaluru : இந்தியாவிலேயே முதன்முறையாக உணவு சாப்பிட்டவாறே சினிமாவை கண்டு ரசிக்கும் முறை, பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Kannan

நவீன தியேட்டர்கள் :

PVR INOX Launch Indias First Dine In Cinema at M5 ECity Mall in Bengaluru : பொதுமக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முக்கிய இடம் பிடித்து இருப்பதை சினிமா தியேட்டர்கள். சினிமா ஸ்கிரீன்களுக்கு இணையாக நவீன அம்சங்களுடன் டிவிக்கள் வந்து விட்டாலும், தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் நிறைவை வேறு எதுவும் கொடுக்காது.

பிவிஆர் தியேட்டர்கள் :

நவீன வசதிகளுடன் திரையரங்குகள் ரசிகர்களுக்கு நாளும் புதிய அனுபவங்களை கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பிவிஆர்(PVR INOX Theatre Bangalore) போன்ற நிறுவனங்கள் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றன. இங்கு உணவு பொருட்களை விற்பனை செய்வதன் மூலமும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

உணவு சாப்பிட்டவாறே படம் பார்க்கலாம்

இந்தநிலையில், பொதுமக்கள் தாங்கள் உட்காரும் இருக்கையில் இருந்தபடி உணவு சாப்பிட்டவாறே படம் பார்க்கும் வசதியை பிவிஆர் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. பெங்களூருவில் உள்ள சில பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR INOX) திரையரங்குகளில், குறிப்பாக M5 ECity திரையரங்கில், டைனிங் டேபிள் வசதியுடன் இருக்கைகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.இதன் மூலம். சினிமா பார்த்தவாறே உணவை சாப்பிட்டு மகிழலாம்.

மேலும் படிக்க : Kantara: Chapter -1 : ’ரிஷப் ஷெட்டி’யை புகழ்ந்து தள்ளும் ராஜமௌலி

தியேட்டரில் லைவ் கிச்சன் :

இதற்காக திரையரங்கில், சிறப்பு 'லைவ் கிச்சன்' மூலம் உங்களுக்குப் பிடித்த உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடலாம். அங்கு உடனே சமைத்துத் தரும் வசதியும், இருட்டில் சாப்பிடாமல் இருக்கும் வகையில் LED விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இsந்தியாவிலேயே முதன்முறையாக இந்த வசதி அறிமுகப்படுதப்பட்டு(Indias First Dine in Cinema) உள்ளது. இந்த புதிய முறைக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

======