Rajinikanth Kamal Haasan Nelson Kh - Rk Film update
திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் திரையில் இணைந்து நடித்து சுமார் 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புரோமோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த புரோமோ வெளியான பிறகு படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' மற்றும் 'தர்மன்' ஆகிய படங்களின் படப்பிடிப்பிலும், கமல்ஹாசன் 'இந்தியன் 3' படப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
'ஜெயிலர் 2' வெற்றி தந்த உத்வேகம்
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடியை நெருங்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் பிவிஆர் திரையரங்கு விநியோக சிக்கல்கள் இருந்தபோதிலும், மற்ற திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது.
இந்த பிரம்மாண்ட வெற்றியத் தொடர்ந்து, ரஜினி - கமல் இணையும் புதிய படத்தின் பணிகளை நெல்சன் திலீப்குமார் தற்போது துரிதப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டிலும் இருவருக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால், வட இந்திய அளவிலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு எப்போது தொடக்கம்?
நடிகர் ரஜினிகாந்தின் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல் கமல்ஹாசனும் 'இந்தியன் 3' பணிகளை நிறைவு செய்யவுள்ளார்.
இவர்கள் இருவரும் தங்களது முந்தைய படப் பணிகளை முடித்ததும், அடுத்த ஆண்டில் (2027) இப்புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளார். அதற்குள் படத்தின் திரைக்கதை, நடிகர்-நடிகையர் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆகியவற்றை முழுமையாக முடித்துவிட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு
இன்பன் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' (Red Giant Movies) நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிர்மல் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கிரண் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
=============