Ramayana Part 1 Box Office Collection Day 11 Dhurandhar 2 Record source:thamizhalai
சினிமா

11 நாட்களில் ரூ.1,404 கோடி வசூலித்த 'ராமாயணா': 'துரந்தர் 2' சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' முதல் பாகம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,404 கோடி வசூலித்து, 'துரந்தர் 2' சாதனையை முறியடித்துள்ளது.

Kavitha prasanna

'Ramayana' grosses Rs 1,404 crore in 11 days: Breaks the record of 'Dhurandhar 2' to create new box office history!

11 நாட்களில் ரூ.1,404 கோடி வசூல் சாதனை

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே, சன்னி தியோல் ஆகியோர் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவான ராமாயணா திரைப்படம் , தீபாவளி வெளியீடாக நவம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 11 நாள் வசூல் சாதனை விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் தயாரான 'ராமாயணா', வெளியான முதல் 8 நாட்களிலேயே ரூ.1,000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது இரண்டாவது வார விடுமுறை நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் முதல் 11 நாட்களில் ரூ.1,404 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'துரந்தர் 2' சாதனையை முறியடித்த 'ராமாயணா'

திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சிறப்பான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. வசூலில் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி வரும் 'ராமாயணா', இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனையையும் முறியடித்துள்ளது.

இரண்டாவது ஞாயிறு சாதனை

அதாவது இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த 'துரந்தர் 2' திரைப்படம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திரையரங்குகளில் ரூ.68.1 கோடி வசூலித்திருந்தது. தற்போது அந்த சாதனையை ராமாயணா முறியடித்து, இரண்டாவது ஞாயிறன்று ரூ.75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

துரந்தர் 2 இந்த வருடத்தில் ரூ. 1,813 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ள நிலையில், இச்சாதனையை ராமாயணா முதல் பாகம் முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

=============