'Ramayana' trailer released during Brahma Muhurtham: Sets a record by crossing 10 million views!
பான் இந்தியன் திரைப்படமாக உருவான ’ராமாயணா’
'டங்கல்', 'சிச்சோர்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணா'.
பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான ட்ரெய்லர்
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகத்திற்கான ட்ரெய்லர், ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் உலகளவில் பான்-இந்தியா மொழிகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரே நாளில் 10 மில்லியன் பார்வைகள்
வெளியான குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், தற்போது வரை 10 மில்லியன் அதாவது 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
காட்சி அமைப்பும் VFX பிரம்மாண்டமும்
நேரடியாக ஹிந்தியில் படமாக்கப்பட்டுப் பிற பான்-இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரெய்லரில், ஒளியமைப்பு மற்றும் VFX பணிகள் மிகத் தத்ரூபமாக அமைந்து ஒரு புதிய அனுபவத்தைத் தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராவணனாக அதிரவைக்கும் யாஷ்
சுவாரசியமாக, ட்ரெய்லரின் முதல் காட்சியிலேயே ராவணனாக நடித்துள்ள நடிகர் யாஷ் எப்படி அரசனாக மாறினார் என்பதைக் காட்டிய பிறகே, ராமனாக வரும் ரன்பீர் கபூரை அறிமுகம் செய்கின்றனர்.
ராவணன் குரலும் ரசிகர்களின் விமர்சனமும்
ராமர் தோற்றத்தில் ரன்பீர் கபூர் பொருத்தமாக இருந்தாலும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் யாஷ் மிகக் கம்பீரமாகத் தோன்றுகிறார்.
ரசிகர்கள் ஆதங்கமும், ஏமாற்றமும்
எனினும் ஹிந்தி மொழியில் யாஷின் குரல் சற்று மென்மையாக இருப்பதால், தமிழ் டப்பிங் குரலே ராவணன் கதாபாத்திரத்தின் கம்பீரத்திற்குப் பொருத்தமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ட்ரெய்லரில் அனுமன் கதாபாத்திரம் காட்டப்படாதது சில ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
=====