Ranbir Kapoor Ramayana Box Office Collection Day 7 source:google
சினிமா

வெளியான 7 நாட்களில் இந்தியாவில் ரூ.500 கோடியைக் கடந்த 'ராமாயணா' : உலகளவில் ரூ.934 கோடி வசூலித்து சாதனை!

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'ராமாயணா' திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.934 கோடியும், தென்னிந்திய மொழிகளில் ரூ.100 கோடியும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Kavitha prasanna

Ranbir Kapoor Ramayana Box Office Collection Day 7

7 நாட்களில் ரூ.934 கோடி வசூல்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா: பார்ட் 1' (ராமாயணம்: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்) திரைப்படம், வெளியான 7 நாட்களிலேயே இந்தியாவில் ரூ.500 கோடி நிகர வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இதுவரை உலக அளவில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.934.55 கோடியைத் தாண்டியுள்ளது

இந்தியாவில் நாள் வாரியான வசூல் விவரம்

நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், இந்தியாவில் மொத்தம் ரூ.511.10 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது.

அதன்படி....

  1. முதல் நாள் (வியாழன்): ரூ.64.85 கோடி

  2. இரண்டாம் நாள் (வெள்ளி): ரூ.48.05 கோடி

  3. மூன்றாம் நாள் (சனி): ரூ.69.80 கோடி

  4. நான்காம் நாள் (ஞாயிறு): ரூ.56.15 கோடி

  5. ஐந்தாம் நாள் (திங்கள்): யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 91.5 சதவீதம் உயர்ந்து ரூ.107.50 கோடி

  6. ஆறாம் நாள் (செவ்வாய்): ரூ.94.10 கோடி

  7. ஏழாம் நாள் (புதன்): ரூ.70.65 கோடி

தென்னிந்திய மொழிகளில் சாதனை

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெறும் 6 நாட்களில் தென்னிந்திய மொழிகளின் டப்பிங் பதிப்புகளில் இருந்து மட்டும் நிகர வசூலாக ரூ.100 கோடியைக் கடந்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் இந்தி திரைப்படம் என்ற பெருமையை 'ராமாயணா' பெற்றுள்ளதாக சாக்னில்க் (Sacnilk) தரவுகள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய அளவில் மொழி வாரியான வசூல் நிலவரம்

  1. தமிழ்ப் பதிப்பு: ரூ.17.35 கோடி

  2. தெலுங்குப் பதிப்பு: ரூ.33.00 கோடி

  3. கன்னடப் பதிப்பு: ரூ.41.20 கோடி

  4. மலையாளப் பதிப்பு: ரூ.12.90 கோடி

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் ரூ.1,000 கோடி எதிர்பார்ப்பு

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெளியான முதல் வாரத்திலேயே ரூ.900 கோடியைக் கடந்துள்ள இப்படம், விரைவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

============