Ranbir Kapoor's 'Ramayana' Teaser Released - His Avatar as Lord Rama! source : google
சினிமா

Ramayana Teaser : ரன்பீர் கபூரின் ராமர் அவதாரம் : ’ராமாயணா' டீசர் வெளியீடு!

Ranbir Kapoor Ramayana Movie Official Teaser Released : ’ராமயணா’ திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S Kavitha

நிதேஷ் திவாரியின் 'ராமாயணா'

Ranbir Kapoor Ramayana Movie Official Teaser Released : இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்தின் ராமர் அறிமுக டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

பிரம்மாண்டமான காவியம்

'இது நம் வரலாறு, நம் உண்மை' என்ற வாசகங்களுடன் தொடங்கும் இந்த டீசர், ராமாயண காவியத்தின் பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்துகிறது.

முன்னணி நடிகர்கள்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.

ராமர் கதாப்பாத்திரத்தில் ரன்பீர் பொருந்துவாரா?

ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராக நடிக்கப்போகிறார் என்றவுடனே, ராமர் கதாப்பாத்திரத்திற்கு இவர் பொருந்துவாரா? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன.

ரன்பீர் கபூரின் பதிலடி

ஆனால், ராமாயணா டீசரில் ரன்பீர் கபூரின் தோற்றமும், அவரது முகபாவனைகளும் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

பிரம்மாண்டமான சிஜிஐ காட்சிகளுக்கு நடுவே, ரன்பீர் கபூர் தனது நடிப்பால் ராமர் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்.

தொழில்நுட்பமும், இசையும்

படத்தின் முதல் பாகம் பாலகாண்டம் முதல் ஆரண்ய காண்டம் வரையிலான பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது என கூறபடுகிறது. டீசரின் இறுதியில் காட்டப்படும் புஷ்பக விமானத்தின் வடிவமைப்பு, படத்தின் கலை இயக்கத்தின் தரத்தை பறைசாற்றுகிறது.

இசையில் மெய்சிலிர்க்க வைக்கும் இசையமைப்பாளர்கள்

ஹாலிவுட் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியையும் மெய்சிலிர்க்க வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ராவணனின் வருகை

இயக்குநர் நிதேஷ் திவாரி ராவணனின் ஒரு சிறு தோற்றத்தை மட்டும் காட்டி, ரசிகர்களின் ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். டீசரின் மிகப்பெரிய ஹைலைட்டாக அமைந்தது அதன் முடிவுதான்.

ஒரு சில இடங்களில் சிஜிஐ காட்சிகள் சற்று செயற்கையாகத் தெரிந்தாலும், ஒட்டுமொத்த டீசரின் வேகம் மற்றும் தரம் போன்றவை அந்த குறையை மறைத்துவிடுகிறது.

எதிர்பார்ப்பு

இத்திரைப்படத்திற்கு தொழில்நுட்ப ரீதியாகச் சில மெருகேற்றல்கள் தேவைப்பட்டாலும், ரசிகர்களிடையே இந்த டீசர் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====