Rashmika Mandanna Vijay Deverakonda Marriage Rumours 
சினிமா

ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவிற்கு திருமணமா? புகைப்படம் வைரல்!

Rashmika Mandanna Vijay Deverakonda Marriage Rumours : சினிமாவை தாண்டி நிஜமான ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடி. சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.

Bala Murugan

சினிமாவின் சிறந்த ஜோடி :

Rashmika Mandanna Vijay Deverakonda Marriage Rumours : தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடிகளை, தேர்தெடுப்பதை காட்டிலும் சினிமாவில் யார் சிறந்த ஜோடிகளாக இருந்தாலும் அவர்களை கொண்டாட சினிமா ரசிகர்கள் தவறுவதில்லை. அப்படி சூரியா-ஜோதிகா, அஜித்-ஷாலினி என தொடர்ந்து, ராஷ்மிகா - விஜய்தேவரகொண்டா என தொடர்கிறது என்றால் மிகையாகாது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா படங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருவரின் காம்போவும், இவர்கள் நடித்த காதல் காட்சிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

புகைப்படம் வைரல் :

இதனிடையே, இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள், இருவரும் ரகசிய காதல் செய்கிறார்கள் என்று கிசுகிசுக்கள் வலம் வந்தது. அப்படி இருக்கையில், பல விசு கிசுகிசுவை தாண்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவது நிச்சயம் என ரசிகர்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையும் சுற்றி வந்தது. இந்நிலையில், இவர்களின் திரைப்படபுகைப்படங்கள்,காணொளிகள், நிஜவாழ்க்கை புகைப்படங்கள் என அவர்கள் சார்ந்த விசயங்கள் சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களின் சமூக வலைதளங்களிலும் வலம் வந்து வைரலானது.

நிச்சயதார்த்த கோலத்தில் டியர் காம்ரேட் ஜோடி

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்(Rashmika Mandanna Vijay Deverakonda Engagement Photo) நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்ததில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வருகிற ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் கோலாகல ஜோடியாக, நிச்சயதார்த்த உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க : ‘They Call Him OG’ : முதல் நாள் 150 கோடி : பவன் கல்யாணின் வெற்றி

குஷியில் ரசிகர்கள்

ராஷ்மிகா - விஜய்தேவரகொண்டா(Rashmika Vijay Deverakonda Marriage) ஜோடிக்கு திரையில் நல்லதொரு ரசிகர்கள் இருக்கிற நிலையில், அதை காட்டிலும் அவர்கள் நிஜ ஜோடிகளாக மனதில் சிறை வைத்திருப்போர் ஏராளம். இந்நிலையில், இது தற்பொழுது நிஜமாகியுள்ளபடி புகைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.