366 டிரெண்டிங்கில் வெளியான படம்
Prabhas Movie Salaar: Part 1-Ceasefire Trending in JioHotstar : சில திரைப்படங்கள் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெறும்.
அந்த படங்கள் ஓடிடியில் வெளியான பிறகு ரசிகர்களை கவரும். அப்படியான ஒரு படம் தான் இது. ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் ரூ.700 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்தது.
ஓடிடியில் மட்டும் 366 நாட்கள் டிரெண்டிங்கில் இடம்பெற்றிருந்தது.
பிரபாஸ் நடிப்பில் சலார்
யஷ் நடிப்பில் உருவான ‘கேஜிஎஃப்’ படங்கள் மூலம் ரசிகர்களிடையே அழுத்தமான தடத்தை பதித்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.
‘கேஜிஎப்’ சீரிஸ் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய படம் தான் ‘சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ (salaar part 1 cease fire). இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்தார்.
சலார் திரைப்பட குழுவினர்
ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, பாபி சிம்ஹா மற்றும் ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தாலும், கலவையான விமர்சனங்களே எழுந்தன.
ஜியோ ஹாட்ஸ்டார் வெளியீடு
இதையடுத்து இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஓடிடியில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 366 நாட்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெண்டிங்கில் இடம்பெற்ற நிலையில், அப்போது நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதனையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார் என்று தகவல் வெளிவந்தது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிரபாஸை பொறுத்தவரை, அவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘தி ராஜா சாப்’ படம் தோல்வி அடைந்தது.
அடுத்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர் பிரசாந்த் நீலுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் மூலம் மீண்டும் பிரபாஸ் ரசிகர்களின் மனதில் ஆழப்பதிந்து, விட்ட இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.