Success of the film 'System': Jyothika offers prayers at a renowned temple alongside her husband Suriya! source:jyotika , insta
சினிமா

'சிஸ்டம்' பட வெற்றி கடவுளுக்கு சமர்ப்பணம் : பிரசித்தி பெற்ற கோவிலில் சூர்யா, ஜோதிகா வழிபாடு!

சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஜோதிகாவின் 'சிஸ்டம்' படமும் ஹிட் அடித்துள்ளது

Kavitha prasanna

Success of the film 'System': Jyothika offers prayers at a renowned temple alongside her husband Suriya!

ஜோதிகா நடிப்பில் ’சிஸ்டம்’

பிரபல முன்னணி நடிகை ஜோதிகா நடிப்பில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான 'சிஸ்டம்' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜோதிகா, சூர்யா சாமி தரிசனம்

கடந்த மே 22 ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை ஜோதிகா தனது கணவரும் நடிகருமான சூர்யா மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கோயிலுக்கு சென்று இறைவழிபாடு நடத்தியுள்ளார்.

வரவேற்பை பெற்றுவரும் சிஸ்டம்

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த இந்தி திரைப்படம், தற்போது நல்ல வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தமிழில் முத்திரை பதித்த ஜோதிகா, தற்போது மும்பையில் குடியேறி இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சிப் பதிவு

அசாம் மாநிலம் குவாஹாட்டியிலுள்ள உலகப் புகழ்பெற்ற காமாக்யா தேவி கோவிலுக்குச் சென்று ஜோதிகா தரிசனம் செய்துள்ளார். இந்த ஆன்மிகப் பயணம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவின் இன்ஸ்டா பதிவு

அந்த பதிவில் "எனக்குத் தெரியும், எல்லாவற்றிற்கும் காரணம் அவள்தான்! காமாக்யாதேவியின் ஆசியோடு தொடங்கிய 'சிஸ்டம்' திரைப்படத்தின் வெற்றிகரமான பயணம், இன்று மகாலட்சுமியிடம் நிறைவடைந்துள்ளது. படத்திற்கு நல்லாசி பெற்றுள்ளேன். தேவி அம்மா சக்தி எப்போதும் எங்களை வழிநடத்தி முன்னேற்றுவாள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யாவின் ’கருப்பு’ திரைப்படம் வெற்றி

அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் கணவர் சூர்யா மற்றும் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

இரட்டிப்பு மகிழ்ச்சி

அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஜோதிகாவின் 'சிஸ்டம்' படமும் ஹிட் அடித்துள்ளது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

=====