“Superb... We Will Rock!” – Chief Minister Vijay’s one-line review after watching the movie Jananayagan!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தாமதத்தால் தொடர்ந்து தள்ளிப்போனது.
இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற நடிகரும், தவெக தலைவருமான விஜய், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க: தடைகளை உடைத்து நாளை வெளியாகும் 'ஜனநாயகன்' : கடந்து வந்த பாதை! : விஜயின் 32 ஆண்டு திரைப்பயணம் நிறைவு பெறுகிறது..!
சென்சார் அனுமதியும், சான்றிதழும்
சமீபத்தில் சென்சார் போர்டு இப்படத்திற்கு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மறுதினம் படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் எச். வினோத் பகிர்ந்த சுவாரசியத் தகவல்
தற்போது ‘ஜனநாயகன்’ படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக இயக்குநர் எச். வினோத் ஊடகங்களைச் சந்தித்து தொடர்ச்சியாக பேட்டியளித்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முதலமைச்சர் விஜய் கூறிய கருத்து குறித்து இயக்குநர் எச். வினோத் பகிர்ந்துள்ளார்.
முதல்வர் சொன்ன வார்த்தை
படத்தைப் பார்த்து முடித்ததும், இயக்குநர் எச். வினோத்திடம் நெகிழ்ச்சியுடன் பேசிய முதல்வர் விஜய், "சூப்பர் பா... We Will Rock!" என்று பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முதலமைச்சர் விஜய் கொடுத்த 'ஒன்லைன் ரிவ்யூ' சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, நடிகர், முதல்வர் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
=====