Superstar Actor Rajinikanth honours honest Sanitary worker Padma with gold chain for sanitation worker hands over 45 sovereigns of gold  Source : Rajinikanth X Post
சினிமா

தூய்மைப் பணியாளர் பத்மா : நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு

சென்னையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பத்மாவை நேரில் அழைத்து தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார் நடிகர் ரஜினிகாந்த்.

Rohini

யார் இந்த பத்மா?

Superstar Rajinikanth Honours honest Sanitation Worker Padma : சென்னை திரு​வல்​லிக்​கேணி, கிருஷ்ணாம்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மா (50). இவர் சென்னை மாநக​ராட்​சி​யில் ஒப்​பந்​த தூய்மைப் பணி​யாள​ராக பணி செய்து வருபவர் .

குப்பையில் கிடந்த 45 சவரன்

தி.நகரில் உள்ள மகா​ராஜா சந்தானம் தெரு​வில் தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த போது, அங்கு குப்​பையோடு கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்​த​போது, ஐஸ்​கிரீம் டப்பாவுக்​குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்​பது தெரிந்​தது.

காவல் நிலையத்தில் ஒப்படைத்த பத்மா

உடனடியாக அதனை தனது மேற்பார்வையாளர் மூலமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சோதனையில் அவை 45 பவுன் தங்க நகைகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் நகைகள் அவை என்பது தெரியவந்தது.

நேர்மைக்கு குவிந்த பாராட்டு

பத்மாவின் இந்த நேர்மை செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினர் .

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

இவரின் இந்த நேர்மை செயலை போற்றும் வகையில் தமிழ்நாடு அஞ்சல் துறை இவரது முகம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டு சிறப்பித்தது .

இதன் மூலம் இவர் ஒரு முன்மதிரியான நபராக சிறப்பிக்கப்பட்டுள்ளார் .

நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். அவரின் நேர்மைக்கு பரிசளிக்கும் விதமாக தங்க சங்கிலி அணிவித்து சிறப்பித்தார் . பத்மாவின் நேர்மையான செயலுக்கு கிடைத்த பெருமையாகவே இவையெல்லாம் கருதப்படுகிறது.

================