Suriya Next Movie with Jai Bhim Director TJ Gnanavel Produced by Hombale Films google
சினிமா

மெகா கூட்டணியில் இணையும் சூர்யா - ஞானவேல் : பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜெய்பீம் இயக்குநருடன் மீண்டும் இணையும் சூர்யா. முழு விவரம் !

Kavitha prasanna

Suriya Next Movie with Jai Bhim Director TJ Gnanavel Produced by Hombale Films

'ஜெய் பீம்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேல் இணையும் புதிய திரைப்படத்தைப் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் கூட்டணி

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ஏற்கனவே இந்திய அளவில் மெகா ஹிட்டான 'கே.ஜி.எஃப்', 'சலார்', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த பெருமையைக் கொண்டது.

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்

ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படமும் விரைவிலேயே வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.

மீண்டும் இணையும் பிரபல கூட்டணி

இந்த படங்களைத் தொடர்ந்து, ஹோம்பாலே நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், சூர்யா - ஞானவேல் இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முக்கிய கலைஞர்கள்

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில், பிரபல இளம் நடிகை காயாடு லோஹர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஹோம்பாலே நிறுவனத்தின் நெகிழ்ச்சியான வரவேற்பு

இப்படத்தின் அறிவிப்பை வெளியிட்ட ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், நடிகர் சூர்யாவைத் தங்களது நிறுவனத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாக ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளது.

அச்சமற்ற நடிகர் - சூர்யா

"இந்தத் தலைமுறையின் அச்சமற்ற ஒரு நடிகர், இதுவரை இல்லாத அளவிலான ஒரு மிகப்பெரிய மேடையில் அடியெடுத்து வைக்கிறார்" என்று சூர்யாவைப் பாராட்டி அவர்கள் பதிவிட்டுள்ளனர்.

THE ONE - SURIYA

மேலும், "மூன்று தசாப்தங்களாகத் திரையில் உண்மையை மட்டுமே பேசி, துணிச்சலைத் தேர்ந்தெடுத்து, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்ட அந்த THE ONE - SURIYA- வை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் பெருமையுடன் வரவேற்கிறது" என்றும் தங்களது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Pan-India திரைப்படம்

'ஜெய் பீம்' கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பில் இணைவதால், இத்திரைப்படம் Pan-India அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

=====

சூர்யா புதிய படம், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சூர்யா, த செ ஞானவேல் சூர்யா, காயாடு லோஹர், சாய் அபயங்கர், Suriya Hombale Films Movie, Director Gnanavel Suriya Next Film, Kayadu Lohar, Sai Abhyankar Music, Suriya 2026 Movie Announcement.