வசூல் வேட்டையில் கருப்பு படம்
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள கருப்பு படம் மூன்று நாட்கள் கணக்கின் படி தமிழ்நாட்டில் 80 கோடி மற்றும் உலகளவில் 147 கோடி எனவும் அதிகாரப்பூர்வமாக இப்படக்குழு அறிவித்துள்ளது
பிரபலங்கள் இணைந்த திரைப்படம்
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர்.
மே 15ம் தேதி வெளியான படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து அசத்தி வருகிறது. தற்போது வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
207 கோடி வசூல் : தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இப்பட முதல் நாள் 14 கோடி (Gross) எனவும் உலகளவில் 32 கோடி (Gross) இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மூன்று நாட்கள் கணக்கின் படி தமிழ்நாட்டில் 80 கோடி மற்றும் உலகளவில் 147 கோடி எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இப்படம் தற்போது உலகளவில் 207 கோடி வசூல் செய்துள்ளதாக நேற்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
இதுவரை சூர்யாவின் அதிகப்பட்ச படம் வசூலித்த படங்கள்
சூர்யா நடிப்பில் உலகளவில் முதல் 100 கோடி வசூல் செய்த படம் `ஏழாம் அறிவு' என சொல்லப்படுகிறது.
இதுவரை சூர்யா படங்களிலேயே அதிக வசூல் செய்தது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து 2013ல் வெளியான `சிங்கம் 2'. உலகளவில் 123 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
100 கோடி வசூலை எட்டிய கருப்பு படம்
இது வரையில் இல்லாத அளவிற்கு சூர்யாவின் கருப்பு படம் இந்திய அளவில் 100 கோடி வசூல் செய்த முதல் சூர்யா படமாக `கருப்பு' மாறி இருக்கிறது.
மேலும் சூர்யாவின் முதல் 200 Crore Club படமாகவும் மாறி உள்ளது. படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக எப்படியும் படம் 300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
=======================