Suriya's 46th Movie poster and release date update:
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆர். ஜே. பாலாஜியின் கருப்பு திரைப்படத்தில் சூர்யா நடித்து முடிந்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா
ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவருடைய இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்து உள்ளது .
சூர்யா ’46’
இந்நிலையில் கருப்பு படைத்தையடுத்து நடிகர் சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி இயக்குநரான வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார்.
லக்கி பாஸ்கர் பட இயக்குநர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் என்ற வெற்றி படத்தின் இயக்குநர் தான் வெங்கி அட்லூரி .
நட்சத்திர பட்டாளம்
இந்தப் படத்தில், நடிகைகள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
இந்த நிலையில், இப்படத்திற்கு, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் வெளியீடு
மேலும் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்,ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ சூர்யா நடிக்கும் 46 ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
===============