T20 World Cup 2026 challenge not only for the Indian team but also for Sanju Samson, leading to his achievements https://x.com/BCCI
சினிமா

New King in T20 : சேட்டன் சஞ்சு சாம்சன்! : வெறும் 5 போட்டிகள், 321 ரன்கள், தொடர் நாயகன் விருது

Sanju Samson Man Of The Series in ICC T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு மட்டுமின்றி, சஞ்சு சாம்சனுக்கும் சவாலாக அமைந்து, அவர் சாதனைகள் படைக்க காரணமாகி இருக்கிறது.

Kannan

திறமையை நிரூபித்த சஞ்சு சாம்சன்

Sanju Samson Man Of The Series in ICC T20 World Cup 2026 : கிரிக்கெட் வரலாற்றில் பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு வீரர் தனது திறமையை உலக அரங்கில் நிரூபிப்பது என்பது அரிதான செயல். அந்த வரிசையில், 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் சஞ்சு சாம்சனின் வாழ்நாள் சாதனையாக அமைந்து விட்டது எனலாம்.

வெற்றி கோப்பைக்கு காரணமானவர்

பல ஆண்டுகளாக அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்த சஞ்சு, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தூணாக நின்று கோப்பையை வென்று கொடுத்து அசத்தி உள்ளார்.

தொடர் நாயகனாக எழுச்சி

இந்தத் தொடர் முழுவதும் சஞ்சு சாம்சன் காட்டிய நிதானமும், அதேசமயம் வெளிப்படுத்திய அதிரடியும் கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியது.

2014ல் விராட் கோலி படைத்த 'ஒரு தொடரில் அதிக ரன்கள்' என்ற சாதனையை முறியடித்து, மொத்தம் 321 ரன்களை சஞ்சு சாம்சன் குவித்தார்.

இந்தத் தொடரில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே களம் இறக்கப்பட்ட சஞ்சு இந்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்தார் சஞ்சு.

இறுதிப் போட்டியில் உலக சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு, அபிஷேக் ஷர்மா ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

இந்தப் போட்டியில் சஞ்சு விளாசிய 89 ரன்கள், டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றிலேயே ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாகப் பதிவானது. இதன் மூலம் 2012-ல் மார்லன் சாமுவேல்ஸ் படைத்த (85 ரன்கள்) சாதனையை சஞ்சு தகர்த்து எறிந்தார்.

புள்ளிவிவர நாயகன்

சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் வெறும் ரன்களோடு மட்டும் நின்று விடவில்லை. அவரது புள்ளிவிவரங்கள் வியக்கத்தக்க வகையில் அமைந்தன.

இந்தத் தொடரில் சஞ்சுவின் சராசரி ஸ்டிரைக் ரேட் 80.25 ஆக இருந்தது. மிக முக்கியமாக, 199.37 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களைக் குவித்தார்.

மேலும் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை 24 சிக்ஸர்களுடன் வசப்படுத்தினார்.

அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி என இரண்டிலும் அரைசதம் கடந்து, நெருக்கடியான நேரங்களில் ஜொலிக்கும் 'பிக் மேட்ச் பிளேயர்' என்பதை சஞ்சு சாம்சன் நிரூபித்து விட்டார்.

நாயகனாக ஜொலித்த சஞ்சு

2024 டி20 உலகக்கோப்பை அணியில் சஞ்சு இடம்பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால், மனம் தளராத சஞ்சு, உள்நாட்டுப் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் காட்டிய சீரான ஆட்டத்தினால் 2026 அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

இந்த முறை வெறும் வீரராக மட்டுமல்லாமல், தொடரை வென்று கொடுத்த கதாநாயகனாக (Player of the Tournament) உருவெடுத்துள்ளார்.

வெற்றியில் சஞ்சு பங்கு மகத்தானது

இந்திய அணிக்கு மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை பெற்றுத் தந்ததில் சஞ்சு சாம்சனின் பங்கு ஈடுஇணையற்றது.

”சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை" என்ற விமர்சனத்திற்கு, தனது பேட்டிங் மூலமாக அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

=================