Tamil Nadu Film Awards 2016 - 2022 - Film industry professionals Director Pa. Ranjith express dissatisfaction Source : Google
சினிமா

தமிழ்நாடு திரைப்பட விருதுகள்- திரைத்துறையினர் அதிருப்தி பதிவு!

தமிழக அரசு திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்துள்ள நிலையில் இதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி உள்ளிடோர் சமூகவலைதளத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Baala Murugan

இயக்குநர் பா. ரஞ்சித் பதிவு

Director Pa. Ranjith about Tamil Nadu State Film Awards 2016 - 2022 : தமிழக அரசு திரைப்பட விருதுகளை அறிவித்து, அதில் சேர்வுசெய்யபட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதற்கு திரைத்துறையை சேர்ந்த சிலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், தனது சார்பட்டா பரம்பரையில் நடித்த நடிகர்களான, ஆர்யா , பசுபதி என இருவரின் பெயரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இருந்தபோதும், இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது திரைத்துறை மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ள நிலையில், இவரின் இந்த பதிவிற்கும் பலரும் தங்களின் கேளி மற்றும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிருப்தி

இதைப்போல், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் தனது அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சி! அதில் மாநாடு படத்திற்கு இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த எடிட்டருக்கான விருது @Cinemainmygenes , சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது @Richardmnathan வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.

மிக மிக அவசரம் அதேசமயம் 2019 இல் வெளியான "மிக மிக அவசரம்" படம் தேர்வாளர்களின் பார்வையில் படாமல் போனது ஏனோ?! சமூகம் சார்ந்து பெண் போலீசாரின் அவஸ்தையை கருணையோடு அணுகிய படம் கண்ணை மறைத்துவிட்டது போலும். ஒருவேளை தமிழக அரசு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வந்திருந்தால் பார்வைக்கு கிடைத்து விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். இப்படி பல வருடங்களாகக் கிடப்பில் போட்டு மொத்தமாக வழங்குவதால் கூட கண்ணில் படாமல் போயிருக்கலாம் என்று வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.