The 'Patha' movie from the Vijay Sethupathi - Balaji Tharaneetharan collaboration: Official release date announced google,ai
சினிமா

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியின் 'பத்தா' திரைப்படம்: வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகும் 'பத்தா' படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் ஓடிடி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Kavitha prasanna

The release date and OTT details for the film 'Paththa', a collaboration between Vijay Sethupathi and Balaji Tharaneetharan, have been announced.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் அட்லி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி

விஜய் சேதுபதி - 56 எனும் இத்திரைப்படத்திற்கு 'பத்தா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960 காலகட்டத்தை மையப்படுத்திய கதைக்களம்

சாய் அபயங்கர் இசையமைக்கும் இத்திரைப்படம், 1960-களின் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பத்தா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை

இத்திரைப்படத்தின் ஓடிடி (OTT) உரிமையை முன்னணி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிஸியான விஜய் சேதுபதி

சமீபகாலமாக பான் இந்திய அளவில் கவனம் பெற்று வரும் விஜய் சேதுபதி நடிப்பில், இறுதியாக வெளியான 'மகாராஜா' மற்றும் 'தலைவன் தலைவி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தன.

மணிரத்னம் இயக்கத்தில் சாய்பல்லவியுடன் இணையும் விஜய் சேதுபதி

தற்போது 'ஸ்லம்தாக்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள அவர், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்திரைப்படத்த்தின் படப்பிடிப்பு காட்சிகள் கூட சமீபத்தில் இணையதளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாவதே தீர்வு' : சட்டப் பேரவையில் புயலைக் கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!

=====