Dhanush's 55th film update - Interesting information released! google
சினிமா

தனுஷின் 55 வது பட அப்டேட்- வெளியான சுவாரசிய தகவல்!

இயக்குநர், நடிகர் என பன்முகங்களில் திரைப்பயணத்தை தொடரும் நடிகர் தனுஷின் 55 வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Baala Murugan

தனுஷின் திரைப்பயணம்

dhansuh next films நடிகர் தனுஷ் தனது தந்தையான கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.தொடர்ந்து பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும், சில வெற்றி படங்களை அவர் பதித்ததால், இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இன்று உச்ச பட்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இயக்குநராகவும், பாடலாசிரியராகவும் பரிணாமித்த அவர், அவ்வப்போது குறிப்பிட்ட படங்களின் மூலம் தனது பாடல் மற்றும் தயாரிப்பு என தமிழ் சினிமாவில் தனது பன்முகத்தன்மையை தனது ரசிகர்களுக்கு வெளிக்காட்டி வருவார்.

பின்னர், 2017 ஆம் ஆண்டு பவர்பாண்டி என்னும் படத்தை இயக்கி இயக்குநர் முகத்தை வெளிக்காட்டினார்.இதைத்தொடர்ந்து இயக்கத்திற்கு நீண்ட இடைவெளி விட்டு நடிப்பில் கவனம் செலுத்திய அவர், பின்னர் 2024 ஆம் ஆண்டு ராயன் என்னும் படத்தை இயக்கி பெருமளவு வசூல் வெற்றி கண்டார்.இதைத்தொடர்ந்து இயக்கத்தில் முழுவதும் களமிறங்கி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி, நடிப்பை தாண்டி இயக்கத்திலும் முழு முணைப்பு காட்டி வருகிறார்.

நடிகர் தனுஷின் அடுத்த படம்

இந்நிலையில், நடிகர் தனுஷின்-55 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தனுஷின் 55ஆவது படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கவும்பட்டது. அதற்கான, பூஜை புகைப்படங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,

இப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இட்லி கடை, தேரே இஷ்க் மே, கர ஆகிய படங்களில் தனுஷ் நடித்து முடித்தார். இதில் இரண்டு திரைப்படங்கள் கடந்தாண்டு வெளியாகி வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றன.

குஷியில் ரசிகர்கள்

இதற்கிடையே, தனுஷ் - 55 திரைப்படத்திலிருந்து கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் விலகினார். படத்தின் பட்ஜெட் அதிகரிப்பே இதற்குக் காரணம் எனத் தகவல் வெளியானது. சில சினிமா கிசுகிசுக்களை உருவாக்கி இருந்தது. இந்த சூழலில்,இத்திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கத்திலும் நடிப்பிலும் என தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் நடிகர் தனுஷின், அடுத்த படம் குறித்த அப்டேட் அவரது ரசிகர்களையும், திரைவட்டாரங்களையும் குஷியில் ஆழ்த்தியுள்ளது.