பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படம் :
They Call Him OG Box Office Collection Worldwide : தெலுங்கு சினிமாவில் ’பவர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் பவன் கல்யாண், ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘ஓஜி’ படம் 25ம் தேதி(OG Release Date) வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. அதற்கு முந்திய நாள் பிரிவ்யூ காட்சிகளும் இருந்தன. உலக அளவில் இந்தம் படம் திரையிடப்பட்டுள்ளது.
பவன் கல்யாண் கம்பேக் :
சுஜித் இயக்கிய இந்தப் படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதால், தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பவன் கல்யாணுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றிப் படமாக ‘ஓஜி’ அமைந்திருக்கிறது.
முதல் நாள் வசூல் ரூ.154 கோடி :
இந்தப் ‘ஓஜி’ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.154 கோடியை வசூல் செய்து(OG First Day Collection), 100 கோடி படங்கள் வரிசையில் இணைந்து இருக்கிறது. தெலுங்கில் மட்டுமே வெளியாகி இந்தளவுக்கு வசூல் செய்திருப்பதால் வர்த்தக நிபுணர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் முதல் நாள் வசூலில் அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தினை பிடித்திருக்கிறது.
கூலியை மிஞ்சிய ‘ஓஜி’.
அனைத்து மொழிகளிலும் வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் 151 கோடி தான் வசூல்(Coolie Box Office Collection) செய்திருந்தது. ஆனால், தெலுங்கில் அதனை முறியடித்து 154 கோடி வசூல் செய்திருக்கிறது ‘ஓஜி’.
இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் பவன் கல்யாண்(Pawan Kalyan) உடன் நடித்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க : Lokah Film: அதிக வசூல் மலையாள படம் : புதிய சாதனை படைக்கும் ’லோகா’
டிக்கெட் விலை ரூ.1,000 :
ஒளிப்பதிவாளராக ரவி கே சந்திரன், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்திருந்தனர். முக்கியமாக, ஆந்திர அரசு முதல் நாளில் 1000 ரூபாய் வரை டிக்கெட்(They Call Him OG Movie Ticket Price) விற்றுக் கொள்ளலாம், அதிகப்படியான காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ‘ஓஜி’ படத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
============