Thiruvilayadal Movie 4K Digital Re-Release source:thamizhalai,ai generated
சினிமா

61 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளிவரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'திருவிளையாடல்'!

சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் 1965-ல் வெளியான 'திருவிளையாடல்' திரைப்படம் 61 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.

Kavitha prasanna

Thiruvilayadal Movie 4K Digital Re-Release: Classic Tamil Cinema

திரை உலக மைல்கல்: 'திருவிளையாடல்' திரைப்படம்

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்திரி, முத்துராமன், டி.எஸ்.பாலையா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து 1965-ம் ஆண்டு வெளியான காவியத் திரைப்படம் 'திருவிளையாடல்'.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பக்திப் படங்களில் ஒன்றாக அமைந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெள்ளிவிழா சாதனையைப் படைத்தது.

இசை மற்றும் வசனங்களின் மகத்தான வெற்றி

கே.வி.மகாதேவன் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றன.

"ஆணுக்குப் பெண் அடிமை" எனப் பேசும் ஈசனிடம் "ஆணை பெற்றுத் தருவதே பெண், நானின்றி நீயில்லை... சக்தியில்லையேல் சிவமில்லை" என தாட்சாயணி பேசும் வசனங்களும்,

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என நக்கீரர் பேசும் ஆவேச வசனங்களும் தலைமுறையையும் கடந்து இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

சிவாஜி - நாகேஷ் இடையே மறக்க முடியாத காட்சிகள்

சிவபெருமானாக நடித்த சிவாஜி கணேசனுக்கும், தருமி கதாபாத்திரத்தில் நடித்த நாகேஷுக்கும் இடையிலான கேள்வி - பதில் நகைச்சுவைக் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்காத இடம் பிடித்தவை ஆகும்.

இக்காட்சிகளின் உரையாடல்கள் இன்றளவும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.

திருவிளையாடற் புராணக் கதைகளின் தொகுப்பு

சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை விவரிக்கும் திருவிளையாடற் புராணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டது.

61 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் புதுப்பொலிவு

வெளியாகி 61 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இத்திரைப்படம் தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டுப் புதிய பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

ஸ்ரீபால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி.லதா இத்திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

======