Fans are praising the English trailer of Yash's 'Toxic', noting that it is of Hollywood quality source: google,ai
சினிமா

KGF புகழ் நடிகர் யாஷின் 'டாக்ஸிக்': உலக அளவில் 12,000-க்கும் அதிகமான திரையரங்குகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!

யாஷின் 'டாக்ஸிக்' ஆங்கில டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Kavitha prasanna

Fans are praising the English trailer of Yash's 'Toxic', noting that it is of Hollywood quality.

நடிகர் யஷ் நடித்த 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலக அளவில் 12,000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகிறது.

பிரம்மாண்ட ரிலீஸ் மற்றும் வெளியீட்டு தேதி

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பு

சமீபத்தில் வெளியான டிரெய்லரில் அப்பா, மகன் என இருவேறு கதாபாத்திரங்களில் தோன்றிய யஷ்ஷின் தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஹாலிவுட் தரத்தில் யாஷின் திரைப்படம்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ள நிலையில், இதன் ஆங்கில டிரெய்லர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதிதீவிர வன்முறைக் காட்சிகள்

இப்படத்தில் கடுமையான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இந்தியாவின் அதிதீவிர வன்முறைக் காட்சிகள் கொண்ட பெரிய திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் சான்றிதழ் மற்றும் ஓடுநேரம்

'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் மொத்தம் 3.14 மணி நேரம் ஓடக்கூடிய கால அளவைக் கொண்டுள்ளது.

உலக அளவிலான சாதனைத் திட்டம்

தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை உலக அளவில் 12,000 திரைகளுக்கும் மேல் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.

முதல் இந்தியத் திரைப்படம்?

இந்த எண்ணிக்கையில் வெளியானால், அதிக திரைகளில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை 'டாக்ஸிக்' படைக்கும்.

இதையும் படிங்க : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : அமெரிக்காவில் சாதனை வசூல் செய்து சூர்யா படம் அபாரம்!

======