Kamal Haasan vs Treesha Thosar Winner Of National Award in Tamil 
சினிமா

கமல்ஹாசன் சாதனையை முறியடித்த த்ரிஷா தோசர் : 5 வயதில் தேசிய விருது

Kamal Haasan vs Treesha Thosar Winner Of National Award : தேசிய திரைப்பட விருதில் 5 வயதில் சிறந்த குழந்தை நட்சத்திர விருது பெற்ற த்ரிஷா தோசர், கமல்ஹாசனின் சாதனையை முறியடித்தார்.

Kannan

தேசிய திரைப்பட விருதுகள் :

Kamal Haasan vs Treesha Thosar Winner Of National Award : 71-வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘ஜவான்’ படத்துக்காக ஷாருக்கானும், ‘12த் ஃபெயில்’ படத்துக்காக விக்ராந்த் மாஸ்ஸியும் பகிரந்து கொண்டனர். சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு வழங்கப்பட்டது

‘பார்க்கிங்’ படம் சிறந்த தமிழ் படத்துக்கான விருதையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது எம்.எஸ்.பாஸ்கருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரையுலகின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சிறந்த குழந்தை நட்சத்திரம் த்ரிஷா தோசர் :

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை த்ரிஷா தோசர்(Trisha Thosar National Award) பெற்றார்.5 வயதான த்ரிஷா தோசர் சேலையை கட்டிக்கொண்டு வந்து மேடையில் குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சிரித்த முகத்துடன் அவர் நடந்து வந்த விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரங்கத்தின் பலத்த கைதட்டலுடன் அவர் விருதினை பெற்றார்.

மராத்தி படத்திற்காக தேசிய விருது :

மராத்தியில் வெளியான ‘நாள் 2’ படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது அவருக்கு கிடைத்து இருக்கிறது. இப்படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் அவர் த்ரிஷா தோசர் சிறப்பாக நடித்து இருந்தார். படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 3 தான். த்ரிஷா தோசர் தொடர்ந்து மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தொடர் மூலம் அறிமுகமான த்ரிஷா தோசர் :

மராத்தியில் ஒளிபரப்பாகும், ‘ஐ துல்ஜா பவானி’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் த்ரிஷா தோசர். தற்போது மகேஷ் மஞ்சுரேக்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புன்ஹா சிவாஜி ராஜே போசலே’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

5 வயதில் தேசிய விருது, கமல் சாதனை முறியடிப்பு

5 வயதில் தேசிய விருதினை பெற்றதன் மூலம் நடிகர் கமல்ஹாசனின்(Child Artist Trisha Thosar National Award) சாதனையை த்ரிஷா தோசர் முறியடித்துள்ளார். தனது முதல் படமான ’களத்தூர் கண்ணம்மா’வில் நடித்த போது கமலின் வயது 6. இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. இந்த சாதனையை த்ரிஷா தோசர் முறியடித்து இருக்கிரார்.

மேலும் படிக்க : அகில இந்திய விருதுகள் : பட்டியலில் முக்கிய திரைப்பிரபலங்கள்..!

த்ரிஷா தோசருக்கு கமல்ஹாசன் வாழ்த்து :

அவருக்கு வாழ்த்து தெரிவித்து, எக்ஸ் தள பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பாராட்டு பதிவில்(Kamal Haasan Wishes Trisha Thosar National Award), “உங்களுக்கு எனது பாராட்டுகள். நான் முதல் தேசிய விருது வாங்கும்போது எனக்கு வயது 6. என்னுடைய சாதனையை நீங்கள் முறியடித்துவிட்டீர்கள். இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மேடம். தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

==============