2026 Box Office Top Indian Movies source: google,ai generated
சினிமா

இந்தியத் திரையுலகில் வரலாறு காணாத வசூல் : 2026-ம் ஆண்டின் டாப் 10 படங்கள்! ஜெயிலர் 2, கருப்பு எந்த இடத்தில் தெரியுமா?

2026-ஆம் ஆண்டில் உலகளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த டாப் 10 இந்தியத் திரைப்படங்களின் சிறப்புப் பார்வைகளும் முழு விவரங்களும்.

Kavitha prasanna

2026 Box Office Top Indian Movies

திரையரங்குகளில் வசூல் அலை

ஆண்டு இந்திய சினிமா வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக 2026-ஆம் ஆண்டு உருவெடுத்துள்ளது. பான் இந்தியா படங்கள் முதல் பிராந்திய சினிமாக்கள் வரை உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனைகளைத் தவிடுபொடியாக்கி வருகின்றன.

உலகளாவிய பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமித்துள்ள டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன, அவற்றுள் தமிழ்த் திரைப்படங்களின் இடம் என்ன என்று பார்க்கலாம்.

துரந்தர்: தி ரிவெஞ்ச் - ரூ. 1,820 கோடி

ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான இத்திரைப்படம், உலகளவில் ரூ. 1,820 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து இந்த ஆண்டின் முதன்மை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக முடிசூடியுள்ளது.

ஜெயிலர் 2 - ரூ. 755 கோடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ. 755 கோடி வசூலித்து இரண்டாமிடத்தைக் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் இதன் வசூல் வேட்டை தொடர்கிறது.

திரிஷ்யம்: தி கன்க்ளூஷன் - ரூ. 577 கோடி

த்ரில்லர் கதைக் களத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘திரிஷ்யம்: தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ரூ. 577 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

ஹனுமான் அன்ஷ் - ரூ. 452 கோடி

தெய்வீகமும் நவீனத் தொழில்நுட்பமும் இணைந்த கற்பனைப் படமான 'ஹனுமான் அன்ஷ்' உலகளவில் ரூ. 452 கோடி வசூலித்து நான்காம் இடத்தில் உள்ளது.

பார்டர் 2 - ரூ. 450 கோடி

தேசிய உணர்வை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உருவான 'பார்டர் 2' திரைப்படம் ரூ. 450 கோடி வசூலித்து ஐந்தாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

கருப்பு - ரூ. 360 கோடி

தமிழில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் உலகளவில் ரூ. 360 கோடி வசூலித்து ஆறாவது இடத்தைப் பிடித்து சாதனையைப் பதிவு செய்துள்ளது.

டாக்ஸிக் - ரூ. 342 கோடி

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்த 'டாக்ஸிக்' திரைப்படம் ரூ. 342 கோடி வசூலித்து ஏழாவது இடத்தில் உள்ளது.

பெத்தி - ரூ. 341 கோடி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான 'பெத்தி' திரைப்படம் ரூ. 341 கோடி வசூலுடன் எட்டாவது இடத்தை எட்டியுள்ளது.

மிர்சாபூர் தி மூவி - ரூ. 339 கோடி

பிரபல இணையத் தொடரின் சினிமா வடிவமாகத் திரைக்கு வந்த 'மிர்சாபூர் தி மூவி' திரைப்படம் ரூ. 339 கோடி வசூலித்து ஒன்பதாம் இடத்தில் உள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட் - ரூ. 330 கோடி

மலையாளத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' உலகளவில் ரூ. 330 கோடி வசூலித்து பத்தாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சினிமா சந்தையின் பிரம்மாண்ட வளர்ச்சி

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்கள் எல்லைகளைத் தாண்டி சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் வசூலை ஈர்த்து வருவது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட வளர்ச்சியையும், உலகளாவிய சந்தை பலத்தையும் நிரூபித்துள்ளது.

=============