திருமண நிகழ்ச்சியில் விஜய் - த்ரிஷா
Vijay Trisha Video Viral ahead of Sangeetha Divorce Case Issue : ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யும், தென்னிந்திய திரையுலகின் உச்ச நடிகையாக கருதப்படும் த்ரிஷாவும் ஒரே காரில் , ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்று பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எழுந்த சர்ச்சை
ஏற்கெனவே தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஜயும் த்ரிஷாவும் இணைந்து ஒரே காரில் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
முழுநேர அரசியலில் விஜய்
நடிகர் விஜய் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவது இல்லை. ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி படம் என அறிவித்தார். நடிகர் என்ற நிலையில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
சட்டமன்ற தேர்தல் - தீவிர பிரச்சாரம்
அதன்படி தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய், முக்கிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடுகளில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சங்கீதா விவாகரத்து மனு
இந்த நிலையில் தான், தனது கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தது வெளியாகி பூதாகரமாக வெடித்தது.
சங்கீதாவின் விவாகரத்து கோரிய மனுவில்
அந்த மனுவில் விஜய் தனக்கு பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்தார் என்றும் அதிலிருந்து திருமண உறவு முற்றிலும் உடைந்ததாகவும் கூறியிருந்தார்.
அவமானங்களை சந்தித்தோம்
மேலும் விஜய் பிரபல நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும் அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் , விஜய் அதை மறுக்கவில்லை . அதனால் அவரும் குழந்தைகளுக்கும் அவமானங்களை அனுபவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி
தற்போது ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு விஜயும், த்ரிஷாவும் ஒரே காரில் வந்திருந்தனர். மேலும், இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து இருந்ததும் அனைவரின் கவனத்தையும் முழுமையாக அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
விவாகரத்து செய்தி வெளியான சில நாட்களிலேயே
சங்கீதா விவாகரத்து செய்தி வெளிவந்து பூதாகரமாக வெடித்து சில நாட்களே ஆகிறது. இந்த நேரத்தில், விஜயும் த்ரிஷாவும் ஒரே காரில் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து இந்நிகழ்வில் பங்கேற்றது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் விஜய்யும் , த்ரிஷாவும் பங்கேற்ற இந்நிகழ்வின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.