Vijay-starrer *Jananayagan* set to release tomorrow, fans are eagerly waiting to celebrate AI generated
சினிமா

விஜயின் ’ஜனநாயகன்’ நாளை ரிலீஸ் : விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள் : கொண்டாட உலகம் முழுவதும் காத்திருக்கும் ரசிகர்கள்...!

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், கொண்டாடி மகிழ ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.

Kannan

விஜய் முதல்வரான பின்பு ’ஜனநாயகன்’

முதல்வர் விஜய், கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜனநாயகன். தேர்தலுக்கு முன்பு வெளியாக வேண்டிய இப்படம், பல்வேறு தடைகளை கடந்து, தேர்தலுக்கு பிறகு, முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு ரிலீசாகிறது.

விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

உலகம் முழுவதும் சுமார் 7,000 மேற்பட்ட ஸ்கிரீன்களில் ஜனநாயகன் நாளை வெளியாகிறது. டிக்கெட் விற்பனை குறித்து ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜனநாயகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு, சில தினங்களுக்கு முன்னர் முதலில் கர்நாடகாவில் தொடங்கியது. பின்பு, கேரளாவிலும் தொடங்கி விற்றுத் தீர்ந்தது.

தமிழ்நாட்டிலும் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு விற்றுத் தீர்ந்து விட்டது.

ஜனநாயகன் திரைப்படம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், ஜனநாயகன். இந்த படம்தான் விஜய் அரசியலில் நுழைவதற்கு முன்பு கடைசியாக நடித்த படம் ஆகும்.

ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த திரைப்படம், வெகு நாட்கள் ரிலீஸ் ஆக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. படத்திற்கு ‘ஏ’சான்றிதழ் கிடைக்காததுதான் இதற்கு காரணமானது.

ஜனநாயகன் படம், ஜனவரி 9ம் தேதி பொங்கலை ஒட்டி வெளியாக வேண்டியதாக இருந்தது. பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாக வேண்டியது இந்த படம்.

சென்சார் சான்றிதழ் கிடைக்காததால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாட, ரிலீஸ் தள்ளிப்போனது. பிறகு வழக்கு வாபஸ் பெறப்பட ஜனநாயகன் திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட வாரியம் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது.

படத்தில், பல விதமான வைலன்ஸ் இருப்பதால் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. விஜய் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது மிகவும் அரிது என்பதால், பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

ஜனநாயகன் திரைப்படம், சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது. முதலில் 5 நிமிட காட்சியும், பின்னர் முழு படமும் வெளியானது.

சில ஆயிரம் பேர் உடனடியாக பார்க்கவும் செய்து விட்டனர். இது குறித்த புகாரில், படத்தில் வேலை பார்த்த ஃப்ரீலான்ஸ் எடிட்டர் ஒருவரும் அவருடன் சேர்ந்து இன்னும் பலரும் படத்தை இணையத்தில் பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுவாக, இப்படி ஒரு படம் பல தாமதங்கள் மற்றும் தடைகளை தாண்டி ரிலீஸ் ஆகிறது என்றாலே அதற்கான மவுசு மார்கெட்டில் குறைந்ததாக பார்க்கப்படும்.

எதிர்பார்ப்பு மேலும் அதிகரிப்பு

ஆனால், ஜனநாயகன் படத்திற்கு அது அப்படியே ஆப்போசிட் ஆக இருக்கிறது. இந்த படம், தாமதமாக வெளியானாலும், ஆன்லைனில் ஏற்கனவே லீக் ஆகி இருந்தாலும் இதை தியேட்டரில் பார்க்க பல லட்சம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் நாளை ரிலீசாகும் ஜனநாயகன் படத்தை பார்த்து மகிழ விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

============================