Vishnu Vishal's 'Gatta Kusthi 2' released on OTT: google,ai
சினிமா

ஓடிடியில் வெளியானது விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி 2': எந்த தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

Kavitha prasanna

Vishnu Vishal's 'Gatta Kusthi 2' released on OTT:

விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி -2

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

5 மொழிகளில் ஸ்ட்ரீமிங்

கூடுதல் சிறப்பாக இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

ஜூலை 3-ல் ரிலீசான திரைப்படம்

கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், உலகம் முழுவதும் சுமார் ரூ. 55 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படக்குழு மற்றும் நடிகர்கள் விவரம்

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளரும், நடிகருமான விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட், மோக்ஷா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கட்ட குஸ்தி -2 திரைப்படத்தின் கதைக்களம்

ஆண் - பெண் உறவுமுறை, திருமண வாழ்க்கையில் இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் ஒருவருக்கொருவர் கனவுகளுக்கு மதிப்பளித்தல் ஆகிய முக்கியக் கருத்துகளை நகைச்சுவை பாணியில் வெளிப்படுத்திய படம் இது.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது ஓடிடியிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

'கட்டா குஸ்தி 2': எந்தத் தளத்தில் பார்க்கலாம்?

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: தனுஷின் 'D56' திரைப்படத்தில் இணையும் 'உரியடி' விஜய்குமார் : எதிர்பார்ப்பை எகிறவைக்கும் புதிய தகவல்!

=====